அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து அரங்கேற்ற விழா

திறந்த வெளிக்குரிய கூத்தரங்கு மனிதரின் வாழ்தலைத் தன்னகத்தே கொண்ட கலைவடிவமாகும். இது வட்டக் களரியில் உருவாக்கப்பட்டு வடிவம் பெறுவது.  ஒவ்வொரு தடவையும் களரி அடிக்கும் போது அந்த வெளியில் சமுதாயம் ஒண்றிணையும். வாழும். நுண்கலைத்துறையில் 2012களின் பின்னர் அதன் இயல்பான வெளியில் நின்றே கூத்து கற்பிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கற்றல் - கற்பித்தல் மூலம் திறந்த வெளியில் உருவானதே அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தாகும்.


இதில் நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஆடி தமது ஆற்றல், திறன், நிபுணத்துவங்களை வெளிப்படுத்தினர். இக்கூத்து உருவாக்கத்திற்கு நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் செயற்பட்டுள்ளார். இக்கூத்தே, 21.05.2015 அன்று பல்கலைக்கழக மைதானத்தில் களரி கட்டி மிகப் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்டது. இதன் தொடக்க விழா வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.


நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் தலைமையுரையை ஆற்றினார். கலைகலாசார பீடாதிபதி க.இராஜேந்திரம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையை ஆற்றினார். நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் எண்ணக்கரு விளக்கவுரையையும் சமகாலத்திற்குக் கூத்தரங்கின் தேவை பற்றியும் உரையாற்றினார்.


அத்தோடு, கிழக்குப்பல்கலைக்கழக பதில் பதிவாளர் திரு அ.பகிரதன் அவர்களும் சிரேஸ்ர மாணவ ஆலோசகர் எம்.ரவி அவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர். விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் அண்ணாவிமார்களான ப.கதிர்காமநாதன், சி.அலெக்சாண்டர், ப.கமலநாதன், கூத்தர் த.முத்துலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


பல்கலைகழக சமுதாயமும் ஊர்க் கூத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவைப் பார்த்து மகிழ்ந்ததோடு, பங்குகொண்டு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அவர்கள் பூ மாலை, காசி மாலை, அணிவித்ததோடு சால்வை கட்டியும் கை தட்டியும் தமது வாழ்த்துக்களைத் வெளிப்படுத்தினர்.


இக்கூத்தின் அண்ணாவியாராக வே.தம்பிமுத்து அவர்களும் உதவியாக கண்ணகி முத்தமிழ் மன்ற உறுப்பினர்களான கு.பிரபாகரன், சி.கேதீஸ்வரன், வி.கோடீஸ்வரன் அவர்களும் செயற்படுகின்றனர். இக்கூத்தில் பின்வருவோர் பாத்திரங்களைத் தாங்கி ஆடி மகிழ்வித்தனர்.



அலங்காரரூபனுக்கு சு.சந்திரகுமாரும், அலங்காரரூபிக்கு இ.பிரியாவும், கட்டியக்காரக்கு அ.ரேணுஜனும், அதிவீரசூரனுக்கு ந.கோகுலனும், அழகவல்லிக்கு கு.ஞானவள்ளியும், மந்திரிக்கு தி.பிரதீபாவும், அதிவீரனின் சேனாதிபதிக்கு ச.சரண்யாவும், செகதனையாளிக்கு  சோ.ஞானசக்தியும், செகதனையாளியின் மனைவிக்கு கீ.இலக்கியாவும், செகதனையாளியின் சேனாதிபதிக்கு த.ஜெயகாந்தனும், தூதுவர்களுக்கும், தலையாரிமாருக்கும் அ. ரேணுஜன், யோ. ரோகிலன் ஆகியோரும், விறகுத் தலையனுக்கு ந. தர்சினியும், செட்டிக்கு இ.அனுஜாவும், முனிவருக்கு த.நவராணியும், கள்ளனுக்கு மோகனதாசும், தோழிமாருக்கு சி.கிரிஜா, ச.அனுஜா ஆகியோரும் ஆடினர்.


இக்கூத்திற்கான உடை ஒப்பனைகளைச் செய்தவர்கள் ஓவியர்களான திரு சு.நிர்மலவாசன், ஈ.குலராஜ், ஆசிரியர் திரு நிமல் ஆகியோரும் செய்தனர்.

களரி வேலைகளை சு.சந்திரகுமார், ப.ராஜதிலகன், முதலைக்குடா தேவதாஸ், முனைக்காடு வினோதன், மண்டூர் சுதன், நுண்கலைத்துறை மாணவர்கள், மாணவிகளும் அனைவரும் கற்றல் - கற்பித்தல் மூலம் மேற்கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
















Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin