இலங்கையைச் சேர்ந்த இஸ்லாமிய தீவிரவாதியின் மனைவி, உட்பட குடும்பத்தினரிடம் விசாரணை

சிரியாவில் விமான தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்படும் இலங்கையை சேர்ந்த ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் உறுப்பினர் எனக் கூறப்படுபவரின் மனைவியிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.

சம்பந்தப்பட்ட நபரின் மனைவி, உட்பட குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, காவற்துறை மா அதிபரிடம் கேட்டுள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விசேட காவற்துறை குழு இந்த குடும்பத்தினரிடம் விசாரணைகளை நடத்த உள்ளது.



கலேவல பிரதேசத்தில் உள்ள சர்வதேச பாடசாலை ஒன்றின் முன்னாள் அதிபரும் கராத்தே பயிற்சியாளருமான இலங்கையை சேர்ந்த அபு சுராய் சுலானி,

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் இணைந்து செயற்பட்டதாகவும் சிரியாவில் நடந்த விமான தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இதனையடுத்து காவற்துறையினர் நடத்திய விசாரணைகளில் அவரது ஊர், அடையாள அட்டை உட்பட சகல விபரங்களும் கண்டறியப்பட்டதாக காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்திருந்தார்
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin