தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்!

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திலான நிழற்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.

குறித்த நிழற்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும், கிராம உத்தியோகத்தர்களிடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வியானி குணதிலக்க மேலும் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பாவனையில் இருந்து வந்த தேசிய அடையாள அட்டைகை்குப் பதிலாக இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை பாவனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம், இரத்த வகை ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin