மட்டக்களப்பில் தபால் மூல வாக்களிப்பிற்கு 9842 பேர் தகுதி


மட்டக்களப்பு மாவட்டத்தில் இம்முறை தபால் மூலம்
வாக்களிப்பதற்கு  9842 பேர் தகுதி பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தெரிவித்தார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பித்தவர்களில் 640 பேரது விண்ணப்பங்கள் காலம் பிந்தி அனுப்பப்பட்டமை உள்ளிட்ட பல காரணங்களினால்  நிராகரிக்கப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்களிப்பு கல்வி வலயங்கள், கோட்ட மட்டம் தேசியப்பாடசாலைகளுக்கு எதிர்வரும் 03 ஆம் திகதியும்இ ஏனைய நிறுவனங்கள் திணைக்களங்களுக்கு 05 மற்றும் 06ஆம் திகதியும் நடைபெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்காக16 கட்சிகள் மற்றும் 30 சுயேட்சைக் குழுக்கள் போட்டியிடுகின்றன. இதில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் முன்னணி அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்இ தமிழர் விடுதலைக் கூட்டணி ஈழமக்கள் ஜனநாயக கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்,ஈழவர் ஜனநாயகக் கட்சி,ஜே.வி.பி, அகில இலங்கை தமிழர் மகா சபை,ஐக்கிய மக்கள் கட்சி,ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு,எமது தேசிய முன்னணி,ஜனநாயகக் கட்சி,முன்னிலை சோஷலிசக் கட்சி,ஜனசெத பெரமுன ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட நாம் திராவிட அமைப்பு சுயேட்சையாகப் போட்டியிடுகின்றது. மட்டக்களப்பு மாட்டத்தில் ஐந்து உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக மொத்தமாக 368 பேர் தேர்தல் களத்தில் குதித்துள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,65,167 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றிருப்பதாக மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் ஆர்.சசீலன் தெரிவித்தார்.



Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin