கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் வீதி நாடகங்கள்


கிழக்கு பல்கலைக்கழக திருகோணமலை வளாக தொடர்பாடல் கற்கை நெறியின் மூன்றாம் வருட மாணவர்கள் சமூக விழிப்புணர்வை நோக்காக கொண்டுஅரங்கேற்றிய வீதி நாடக தொடர்  திருகோணமலை நகர மத்தியில் இடம்பெற்றது.

பாடசாலை மாணவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் சமுதாய மக்கள் என அனைவருக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் பல தலைப்புக்களின் கீழ் இவ் வீதி நாடகங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு அரங்கேற்றப்பட்டன.


அவ்வகையில் தற்காலத்தில் போதைப்பொருள் பாவனையினால் ஒருவனது குடும்பமும் அவனோடு இணைந்த சமூகமும் படும் பாட்டினை கருத்திற் கொண்டு "போதைப்பொருள் பாவனையும் சமுதாய சீரழிவும்" என்ற தலைப்பில் ஒரு நாடகமும், அதிகளவிலான முகப்புத்தகப் பாவனையினால் பெண்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், பணத்துக்காக மனிதாபிமானத்தினை விற்று வாழும் தற்கால சமூகம் ,பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம்,  பொருத்தமற்ற ஒருவரை முன்மாதிரியாக கொண்டு வாழ்வதானால் ஏற்படும் பிரச்சினைகள்  எனும் ஐந்து தலைப்புக்களின் கீழ் வீதிநாடகங்கள் இடம்பெற்றன.




Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin