திருகோணமலை நகரசபைக் காணி வரி மக்களின் பெயரிலேயே அறவிடப்பட வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்

திருகோணமலை நகர சபையால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதன வரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரிலேயே அறவிடுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சிமன்ற அமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திருகோணமலை நகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயூதபாணி யின் தலைமையில் காந்திநகர், சுலோட்கவூஸ், கஸ்தூரிநகர் ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் கே. கோகுலராஜ் ஆகியோர் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் நகரசபை செயலாளர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.


1947 ம் ஆண்டு முதல் மேற்சொன்ன கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு 1995 ம் ஆண்டு முன்னாள் நகரசபை தலைவர் பி. சூரியமுர்த்தி அவர்களால் காணிகளும் அதற்குரிய ஆவணங்களும் வழங்கப்பட்டிருந்தன.


இருப்பினும் அப்போது மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக்களை வழங்கவே அவர்களால் வழங்கப்பட்ட ஆவணம் செல்லுபடியானதாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் முன்னாள் நகரசபைத் தலைவர் ச. கௌரிமுகுந்தன் அவர்களுடைய காலத்தில் 576 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டு அவை காணி பதிவாளர் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டு நகரசபை பதிவேட்டிலும் பதியப்பட்டது..


இக்காணிக்காக நகரசபையால் அறவிட வேண்டிய வரிகளை சிலரிடம் நகரசபையின் பெயரிலேயே நகரசபை அறவிட்டு வந்தது.




இச்சந்தர்பத்திலேயே மிக நீண்ட காலமாக இழுபறி நிலையில் இருந்து வந்த இப்பிரச்சினை வியாழக்கிழமை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னரே மாகாண உள்ளுராட்சிமன்ற அமைச்சருமாக இருக்கும் கிழக்கு மாகாண முதலமைச்சரினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.






Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin