நீர் பருகிய க.பொ.த.(சா/த) 6 மாணவிகள் வயிற்றுப்போக்கால் அவதியுற்று வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நீர் பருகிய க.பொ.த.சா.த 6 மாணவிகள் வயிற்றுப்போக்கால் அவதியுற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வியாழக்கிழமை வழமைபோன்று பாடசாலைக்கு வந்த மாணவிகள் பாடசாலையில் உள்ள குடி நீரைப் பருகியுள்ளள்னர்.

அதேவேளை, ஏற்கெனவே ஒரு மாணவிக்கு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய ஐந்து மாணவிகளும் உடனடியாக வயிற்றுப் போக்குக்கு உள்ளாகியுள்ளனர்.

முதலுதவி வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் வயிற்றுப்போக்குக்கு ஆளான மாணவிகளின் நிலைமை மோசமாகவே உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் வடிவேல் ஹரன் தெரிவித்தார்.

இந்தப் பாடசாலையில் கிணற்றிலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மோட்டார் 2013 ஆம் ஆண்டு திருட்டுப் போய் விட்டது. அதன் பி;ன்னர் அடி பைப்பின் மூலம் பெறப்படும் நீரையே இந்தப் பாடசாலையில் உள்ள சுமார் 450 மாணவர்களும் 17 ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.



குடி நீர் மற்றும் மலசலகூட வசதியின்மையால் இந்தப் பாடசாலையின் மாணவர்களும் ஆசிரியர்களும் நீண்டகாலமாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin