பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் தோல்வியடையும் - ஜோதிடர் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் அவரால் பிரதமர் பதவிக்கு வர முடியாது என பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் கூறி ஜோதிடர்களில் பெரேராவும் ஒருவர்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா தோல்வியடைவார் எனவும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அவரை சிறையில் தள்ளியவர்களே அவரை விடுதலை செய்வார்கள் எனவும் ஜோதிடர் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் பொன்சேகா இழந்த அனைத்தும் அவருக்கு 2015 ஏப்ரலுக்குள் கிடைக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அத்துடன் அவருக்குரிய ஓய்வூதியம் உட்பட அனைத்து சிறப்புரிமைகளும் மீள கிடைத்தன.

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து பத்திரிகை ஒன்றில் ஜோதிட எதிர்வு கூறலை வெளியிட்டுள்ள நாத்தாண்டியே பீ.டி. பெரேரா, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் தோல்வியடையும் என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.



ஐக்கிய தேசியக் கட்சி சில கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கும் எனவும் மகிந்த ராஜபக்சவுக்கு பிரதமராகும் எவ்விதமான அனுகூலமும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலில் கொழும்பில் போட்டியிடும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் முக்கியஸ்தர் ஒருவர் உட்பட சிலர் தோல்வியை தழுவார்கள்.

அத்துடன் பொதுத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் பலம் சற்று அதிகரிக்கும் எனவும் ஜோதிடர் மேலும் தெரிவித்துள்ளார்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin