பெரும்பான்மை கட்சிகளை வெற்றிபெறச் செய்ய த.தே.கூவிற்குள் புலனாய்வாளர்கள்........


பெரும்பான்மை கட்சிகளை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என்பதற்காக சில புலனாய்வாளர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்குள் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்....

காரைதீவில் மக்களால் பிரச்சார நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இங்கு மக்கள் மத்தியில் உரையாற்றிய கலையரசன்,
இம்முறை த.தே.கூட்டமைப்பு வெற்றி பெறுவதென்பது உறுதியாய் உள்ள நிலையில் அதனை சீர்குலைக்க சிலர் விசமப் பிரசாரங்களை மக்கள் மத்தியில் செய்து வருகின்றார்கள்.
அதற்கு பெரும்பான்மை கட்சிகளை வெற்றி பெறச்செய் வேண்டும் என்பதற்காக சில புலனாய்வாளர்கள் த.தே.கூட்டமைப்பிற்குள் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.
இவ்வாறானவர்கள் என்மீதும் சில விமர்சனங்களை முன்வைப்பதற்கு எத்தனித்திருக்கின்றார்கள் என மக்கள் ஆதங்கப்படுகின்றார்கள்.
கிழக்கு மாகாணசபையால் வழங்கப்பட்ட தொழில் வாய்ப்பினை விற்றுத் தான் பணம் பெற்றுக்கொண்டதாகவும் மக்களுக்கு தவறான கருத்துக்களை முன்வைத்து வருகின்றார்கள்.
அவர்களுக்கு நான் விடுக்கும் வேண்டுகோள் யாராக இருந்தாலும் நான் யாரிடமாவது பணம் பெற்றோ அல்லது எனது உறவினர்களுக்கோ தொழில் வழங்கி இருக்கின்றேன் என்று நினைத்தால் பொது மதத்தலைவர்கள் முன்னிலையில் பகிரங்க விவாதத்திற்கு வருமாறு சவால் விடுக்கின்றேன்.
எனது அரசியல் பயணமானது பல போராட்டங்களைக்கண்ட பயணமாகும். அந்தகாலகட்டத்தில் துப்பாக்கிகளோடும், றவைகளோடும் எனது மக்களுக்காக பணிபுரிந்தவன்.
இன்றும் எந்தச்சவால்கள் வந்தாலும் அதற்கும் துணிந்து நின்று அரசியல் பயணத்தினை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றேன்.
அம்பாறை மாவட்டத்தினை பொறுத்தவரையில் த.தே.கூட்டமைப்பின் வெற்றியை எவராலும் தடுக்கமுடியாது.
காரணம் எமது தாயக மக்கள் பல வலிகளுக்கு முகங்கொடுத்தவர்கள்.
எந்த வகையான புலனாய்வாளர்கள் எமது கட்சிக்குள் உள் நுழைந்தாலும் எமது கட்சியின் கட்டமைப்பினை தகர்த்தெறிய முடியாது என்பது காலம் சொல்லும் பதில் என்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த மண்ணில் பல்லாயிரக்கணக்கான மாவீரர்களை விடுதலை போரிலே தியாகம் செய்த மண் மீண்டும் ஒருமுறை வரலாறு படைக்க அனைத்து மக்களும் அணிதிரளவேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் விட்ட தவறை இம்முறையும் செய்ய யாரும் முனையக்கூடாது.
அவ்வாறு செய்ய யாராவது எத்தனிப்பார்களேயானால் அது ஒட்டு மொத்த தமிழினத்திற்கும் செய்யும் துரோகமாகும்.
வலி தந்தோரை தோற்கடித்து விதிவெல்ல வாக்களிப்போம் தமிழ்த் தேசியம் வெல்வதற்கும் அதனைக்காப்பாற்றுவதற்கும் அனைவரும் அணிதிரண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு
வாக்களிப்போம் எனவும் தெரிவித்தார்.



Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin