தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழ் பிரநிதித்துவத்தைப் பலப்படுத்துங்கள் - சீனித்தம்பி யோகேஸ்வரன்

 எமது உறவுகள் எந்த நோக்கத்திற்காக உயிர்த் தியாகம் செய்தார்களோ அந்த இலக்கை அடைவதற்கான தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு வாக்களித்து பலப்படுத்துங்கள் என தெரிவித்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தமிழர் ஆண்ட மண்ணிலே நாங்கள் தொடர்ந்தும் அடிமையாக வாழ முடியாது என்றும் கூறினார்.

கிரான் முதியோர் சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற
கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்!

“2010 ஆண்டு இந்தியாவிலே நடைபெற்ற உலக இந்து மாநாட்டில் கலந்து கொண்டு நாடு திரும்பிய வேளை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் ஐயா தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பாராளுமன்ற தேர்திலிலே கல்குடா தொகுதியில் போட்டியிடுமாறு கூறினார். நான் அரசியலுக்கு வரமாட்டோன் நான் ஒரு மதகுரு ஆன்மீகம் தான் செய்வேன் எனக்கு அரசியல் தேவையில்லை என மறுத்த போதும் கல்குடா தொகுதியில் எமது கட்சி சார்பில் இம்முறை போட்டியிடுவதற்கு எவரும் முன்வரவில்லை ஆகவே நீங்கள் கட்டாயம் போட்டியிட வேண்டும் என கூறினார்.

அதன் நிமிர்த்தம் நான் போட்டியிட்டு பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் என்னால் இயன்றவரை பிரசாரம் செய்து இறைவனின் அருளோடு வெற்றி பெற்றேன். தேர்தலில் வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்தோம்.

தமிழர் இந்த நாட்டிலே வாழுகின்ற உரிமை சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக எமது பிரதேசத்திலே எத்தனையோ தாய்மார்கள் பிள்ளைகளை இழந்துள்ளார்கள் கணவனை சொத்துக்களை இழந்து அகதியாகக்கப்பட்டுள்ளார்கள் ஒரு காலத்தில் தமிழர் ஆண்ட நாட்டிலே நாங்கள் அடிமையாக்கப்பட்டுள்ளோம்.

எங்களுக்கான பூரண சுதந்திரம் கிடைக்க வேண்டும். அரசியல் உரிமை கிடைக்க வேண்டும் என்பதற்காக ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட எமது உறவுகள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள். அவர்கள் எந்த நோக்கத்திற்காக உயிர் தியாகம் செய்தார்களோ அதை நிறைவேற்றுவதற்காக நாங்கள் எதிர்கட்சியிருந்து குரல் கொடுப்பதுடன் எங்களால் இயன்ற சேவையாற்றி வருகின்றோம்.

நாங்கள் நினைத்திருந்தால் அரசாங்கத்துடன் இணைந்து அமைச்சு பதவி பெற்று சுகபோக வாழ்க்கை அனுபவித்திருக்கலாம். ஆனால் நாங்கள் போகவில்லை “நக்குண்டான் நாவிழந்தான்” நாங்கள் அமைச்சு பதவி பெற்றிருந்தால் நான் வாழைச்சேனையில் கோடிஸ்வரனாக இருக்கலாம் ஆனால் அதற்கு நான் தயாராக இல்லை.  எனக்கு எனது மக்கள் வாக்களித்தது எனது குடும்பமோ அல்லது நானோ உழைத்து செல்வந்தனாக வாழ்வதற்காக அல்ல.

இந்த மண்ணிலே எமது மக்கள் எதற்காக உயிர் தியாகம் செய்தார்களோ அதை நிறைவேற்ற பாடுபடுவேன் என்பதற்காக தான் மக்கள் எனக்கு
வாக்களித்தார்கள். அதைக் காப்பாற்றுவதற்காக இன்று வரை நான்
குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறேன்.


எங்களுக்கு வருடத்துக்கு ஐம்பது இலட்சம் ரூபாய் மாத்திரமே தருவார்கள் மக்களின் அபிவிருத்தி வேலை செய்வதற்காக அந்த பணத்தை மட்டக்களப்பு மாவட்டம் முழுவதிலும் பங்கிட வேண்டும்" என்றார்.




Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin