உளவளத்துணையின் பார்வையில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் சிறுவர் கருத்தரங்கு

சிறுவர் விருத்தி பற்றிய உளவளத்துணையின் பார்வையில் பிரதேச மட்டத்தில் பெற்றோரை விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித்திட்டமானது  21.07.2012 ஆந் திகதி காலை 08.00 மணிக்கு பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் அவர்களது வழிகாட்டலின் பெயரில் உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சத்தியகௌரி தரணிதரன் அவர்களின் தலைமையில் பெரிய கல்லாறு ஸ்ரீ சர்வாத்த சித்திவிநாயகர் ஆலய இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றன.


அபிவிருத்தி உத்தியோகத்தர் (உளவளத்துணை) திருமதி.பிரேமநந்திதா சாரங்கன் அவர்களது வரவேற்புரையுடன் தொடங்கிய இந் நிகழ்வு வளவாளர்களாக உளநல மருத்துவர் டொக்டர் திருமதி. சுசிகலா பரமகுருநாதன், ஆதார வைத்தியசாலை காத்தான்குடி, மாவட்ட இணைப்பாளர் (உளவத்துணை)திரு.க.மதிவண்ணன் வழிகாட்டல் ஆலோசகராக உத்தியோகத்தர் திரு.பா.துஷ்யந்தன் (பட்டிருப்பு வலயக் கல்வி அலுவலகம்) உட்பட பிரதேச செயலக முகாமைச்சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உளவளத்துணை ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

இந் நிகழ்வில் குழந்தைகளின் ஆளுமை விருத்தியின் பெற்றோர்களின் பங்கு, குழந்தையின் ஆளுமை கோளாறு மற்றும் கல்விப் பிரச்சினைகளுக்கான காரணி தொடர்பான உளவியல் விளக்கங்கள் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் தொடர்பான பல வகைப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டன. இதில் பெருமளவிலான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது








Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin