கமெராவை பயன்படுத்திய இருவர் கைது



அம்பாறை பொத்துவில் முஹூது மஹா விகாரை மற்றும் அறுகம்பை கடற்கரையின்  காட்சிகளை நூறு அடி உயரத்தில் பறக்கக்கூடிய ஆளில்லா கமெராவைப் பயன்படுத்தி படம் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் கொழும்பை சேர்ந்த 31 மற்றும் 33 வயதுகளையுடைய இருவரை செவ்வாய்க்கிழமை (21) கைதுசெய்ததாக பொத்துவில் பொலிஸார் தெரிவித்தனர்.


இது தொடர்பில் தமக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து குறித்த இடத்துக்கு சென்று சந்தேக நபர்களை கைதுசெய்ததுடன் அவர்களிடமிருந்து மேற்படி கமெராவையும் கைப்பற்றியதாக பொலிஸார் கூறினர்.

இந்தக் கமெரா மூன்றரை கிலோகிராம் நிறையுடையதும் ஓர் அடி நீளம் அகலம் உயரமும் கொண்டதுடன்  100 அடி உயரத்தில் ஆகாயத்தில் பறந்து படம் எடுக்கக்கூடியதாகும் எனவும்; பொலிஸார் கூறினர்.

இலங்கைக்கு அதிக உல்லாசப் பயணிகளை வரவழைக்கும் நோக்கில் இயற்கை எழிலை ஆகாயத்திலிருந்து படம் எடுப்பதற்காக  ஆகாயக் கமெராவைக் கொண்டு தாம் படம் எடுத்ததாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக எவ்விதத்திலும் தாம்  நடந்துகொள்ளவில்லை எனவும் சந்தேக நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். எனினும் இத்தகைய ஆளில்லா ஆகாயக் கமெராவைப் பயன்படுத்துவதற்கு பாதுகாப்பு அமைச்சின் முன் அனுமதி தேவை என்று பொலிஸார் கூறினர்.

Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin