அரச ஊழியர்களுக்கான அனைத்து கொடுப்பனவுகளும் அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கப்படும்!- பிரதமர்


அரச ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து கொடுப்பனவுகளும் அவர்களின் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அடுத்த வரவு செலவு திட்டத்தில் இந்த கொடுப்பனவுகள் அனைத்தும் அடிப்படை சம்பளத்துடன் இணைத்துக் கொள்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.


காலி அக்மீமன பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹிந்த ஆட்சிக்கு வந்தால் அரச ஊழியர்களின் சம்பளத்தில் 6 ஆயிரம் ரூபாவை குறைத்து விடுவார்: ரணில்

மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வந்தால் அரச ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 6 ஆயிரம் ரூபாவை குறைத்து விடுவார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அக்மீமன பிரதேசத்தல் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

காலிக்கு வந்த மஹிந்த ராஜபக்ச அரச ஊழியர்களின் குறைந்த பட்ச சம்பளத்தை 25 ஆயிரம் ரூபாவாக மாற்ற போவதாக கூறியிருந்தார்.

நாங்கள் மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் வழியை ஏற்படுத்தவே முயற்சித்து வருகின்றோம். ராஜபக்ச மக்களின் வருமானத்தை குறைக்க முயற்சிக்கின்றார்.

பயிற்சிகளை பெறாத தொழிலாளர்களின் அடிப்படை சம்பளம் 11 ஆயிரத்து 730 ரூபா. விசேட கொடுப்பனவாக 10 ஆயிரம் ரூபாவும் வாழ்க்கை செலவு கொடுப்பனவாக 7 ஆயிரத்து 800 ரூபாவும் வழங்கப்படுகிறது. இத்துடன் 2 ஆயிரத்து 500 ரூபா விசேட கொடுப்பனவை சேர்த்தால், 32 ஆயிரம் ரூபா சம்பளம் கிடைக்கும்.

இதில் ஓய்வூதியத்திற்கான வீதம் கழிக்கப்பட்டால், தொழிலாளர்கள் 31 ஆயிரம் ரூபாவை வீட்டுக்கு எடுத்துச் செல்ல முடியும்.

குறைந்த பட்ச சம்பளமான 31 ஆயிரம் ரூபாவை மஹிந்த ராஜபக்ச 25 ஆயிரம் ரூபாவாக மாற்றி, அதில் 6 ஆயிரம் ரூபாவை கழிக்க முயற்சிக்கின்றார் என ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin