கிழக்கு மாகாண அபிவிருத்திக்கும் சம்பூர் மீள்குடியேற்றத்திற்கும் பிரித்தானியா பூரண ஆதரவு

நேற்று  புதன்கிழமை கிழக்கு மாகாணத்திற்கு சென்ற அவர், திருகோணமலை மாவட்டம் சம்பூர் பிரதேசத்திற்கும் சென்றிருந்தார்.

அந்தப் பிரதேசத்தில் 9 ஆண்டுகளுக்குப் பின்னர் மீள்குடியேற்றத்திற்காக அனுமதிக்கப்பட்டு தமது காணிகளை துப்பரவு செய்யும் மக்களையும் அவர் சந்தித்து உரையாடினார்.

மீள்குடியேற்றத்திற்கு தயாராகிவரும் தங்களுக்கு தற்காலிக கொட்டில்கள், கழிப்பறை வசதிகள் மற்றும் குடிநீர் போன்றன உடனடித் தேவையாக இருப்பது பற்றி மக்கள் அவரிடம் கூறியதாக சந்திப்பில் கலந்து கொண்ட கிழக்கு மாகாணசபை உறுப்பினர் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

எந்த உதவியென்றாலும் தங்களால் ஐநாவின் அகதிகளுக்கான அமைப்பின் வழியாகவே வழங்கப்படும் என்றும் அவர் கூறியதாகவும் குமாரசாமி நாகேஸ்வரன் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டை சந்தித்து மாகாணத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் ஜேம்ஸ் டோரிஸ் கேட்டறிந்துள்ளார்.



கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி, யுத்த பாதிப்புக்குள்ளான குடும்பங்களின் வாழ்வாதாரம், விதவைகளுக்கான சுயதொழில் மற்றும் தொழில் வாய்ப்புகளுக்கான கைத்தொழிற்பேட்டைகளை ஆரம்பித்தல் போன்ற தமது திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் அவருக்கு விளக்கியதாக முதலமைச்சர் செயலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டை அவரது காரியாலயத்தில் ஜேம்ஸ் டொரிஸ் நேற்று புதன்கிழமை காலை சந்தித்து கலந்துரையாடினார். இந்தச் சந்திப்பின்போது கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் இவர்கள் இருவரும் கலந்துரையாடினர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் கேட்டுக்கொண்ட விடயங்களை கவனத்திற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தான் ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.

கிழக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அபிவிருத்தி, யுத்தப் பாதிப்புக்குள்ளான குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவி, கைம்பெண்களுக்கு சுயதொழில் வசதி மற்றும் வாழ்வாதார உதவி,  தொழிற்பேட்டைகள் அமைத்தல் ஆகியவற்றுக்கு தமது நாடு பூரண ஒத்துழைப்பு வழங்கும்.

மேலும், கிழக்கு மாகாணத்தில் ஒரு இலட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு என்னும் சவாலுக்கு தனது நாடு சார்பாக தான் பூரண ஆதரவு வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் பிறகு வாகரை வழியாக மட்டக்களப்பு சென்றடைந்த அவர், அரசாங்க அதிபர் பி. எம். எஸ் சார்ள்ஸ் உட்பட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து மாவட்டத்தின் நிலவரம் தொடர்பாக கேட்டறிந்தார்
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin