முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் ; கிழக்கு மாகாண முஸ்லிம்கள்



அக்கரைப்பற்று
( அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் ) பர்மாவில் ரோஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெரும் இனச்சுத்திகரிப்பு வன்முறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் அதனை தடுக்க இலங்கை அரசும் சர்வதேசமும் பர்மா அரசை வலியுறுத்தவும் ரோஹிணியை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி அக்கரைப்பற்று மக்கள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பட்டின பள்ளிவாசல் முன்பாக அமைதியான முறையில் கண்டன பேரணி நடத்தி ரோஹினியா முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்
காத்தான்குடி 
(S.சஜீத்) மியன்மார் முஸ்லிம் உறவுகளுக்கு தற்போது அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன வெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் "அப்பாவி ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொள்ளாதே!!" எனும் தோணிப் பொருளில் கைகளில் பல பதாதைகளை ஏந்தியவாரு காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்ளேனத்தின் ஏற்பாட்டில் (01) இன்று ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றன.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக கொண்டு சென்று காத்தான்குடி பிரதேச செயலக, செயலாளரிடம் காத்தான்குடி மக்கள் சார்பாக மகஜர் ஒன்றினை சமர்ப்பித்தனை தொர்டந்து குறித்த பேரணியினை அமைதியான முறையில் முடித்துக் கொண்டனர் என்பது குறப்பிடத்தக்கது.
கிண்ணியா
(ஹஸ்பர் ஏ ஹலீம்) மியன்மாரில் நடைபெறும் மிலேச்சத்தனமான மனித அழிப்புக்கெதிராக இன்று (01.09.2017) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியாவில் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் துஆ பிரார்த்தனையும்.இடம் பெற்றன இதன்போது ரோஹிங்யா முஸ்லீம்களுக்கெதிராக நடைபெறும் உயிர் இழப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும் இடம்பெற்றது கிண்ணியா பகுதியினைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் அமைப்புக்கள் என பங்கேற்று தங்களது கோசங்களை எழுப்பியவாறு இறுதியாக துஆப் பிர்ர்த்தனையிலும் ஈடுபட்டார்கள்.
ஓட்டமாவடி
ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஓட்டமாவடியில் எதிர்ப்பு பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கல்குடா ஜம்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில், ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றது.
இந்த எதிர்ப்பு பேரணியை கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சமூக சேவை அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன ஒன்றிணைந்து நடத்தியிருந்தன.
இதன்போது பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
இந்த மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin