"திருடன் என்றால் சிறந்த அரச தலைவர்" என்று புது அர்த்தம் கூறும் மகிந்த

திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என்பதே பொருள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். திருடன் என்பது மிகவும் பழமையான ஒர் சொல்லாகும்.

அம்பலான்தொட்டவில் நேற்று  நடைபெற்ற பிரச்சாரக் கூட்டமொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து இது பற்றி பேசிய அவர்,

என்னை சிலர் திருடன் திருடன் என குற்றம் சுமத்துகின்றனர். திருடன் என்பதன் மெய்யான பொருள் சிறந்த அரச தலைவர் என்பதாகும்.



காவியுடை மற்றும் வெள்ளைச் சீருடை திருடன் என கூறிய போதிலும் அவர்கள் எதனையும் திருடவில்லை என திக்வெல்ல பிரதேசத்தில் வைத்து ஒருவர் துண்டு ஒன்றில் எழுதி என்னிடம் கொடுத்தார்.

தே.ஆ என்றால் தேர்தல் ஆணையாளர் என பொருள்படும். பி.செ என்றால் பிரதேச செயலாளர் என பொருள்படும்.

அவ்வாரே திருடன் என்றால் சிறந்த அரச தலைவர் என பொருள்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

சிங்கள மொழியில் திருடனை ஹொரா என அழைப்பது வழக்கமாகும்.

ஹொரா என்றால் ஹொந்தம ராஜ்ய நாயக்கயா (சிறந்த அரச தலைவர்) என பொருள்படும்.

ஹொரா என்ற சிங்கள சொல்லின் அர்த்தத்தையே மாற்றி தேர்தல் பிரச்சார மேடையொன்றில் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin