இலங்கையில் அதிகளவில் பாலியல் தொழிலாளர்களை நாடிச் செல்வோரே எச்.ஐ.வி. தொற்றுக்கு உள்ளாகின்றனர் - ஐ.நா எயிட்ஸ் வேலைத்திட்டம்

இந்தியாவை தவிர, இலங்கை உட்பட தென் கிழக்காசிய நாடுகளில் எச்.ஐ.வி தொற்று உள்ளானோரில் 49 வீதமானவர்கள் பாலியல் தொழிலாளர்களை நாடிச் சென்றவர்கள் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் எயிட்ஸ் வேலைத்திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் எயிட்ஸ் வேலைத்திட்டம் இந்த தகவலை வெளியிட்டது.

இலங்கையில் எயிட்ஸ் மற்றும் எச்.ஐ.வி. பரவும் ஆபத்தான குழுவாக பாலியல் தொழிலாளர்களும் அவர்களை நாடிச் செல்வோரும் உள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.



இதனால், எயிட்ஸ் நோய் குறித்த விழிப்புணர்வு வேலைத்திட்டங்களை அதிகளவில் நடத்த வேண்டும் எனவும் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மாத்திரமல்லாது ஆண் பாலியல் தொழிலாளர்களுக்கும் ஒரே விதத்தில் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் அமைப்பின் எயிட்ஸ் வேலைத்திட்டத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி மருத்துவர் தயாநாத் ரணதுங்க தெரிவித்துள்ளார்.
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin