போதை ஒழிப்பு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

“சுய கண்களால் போதையற்ற உலகைக் காண்போம். போதைத் தடுப்பு தேசிய நிகழ்ச்சியூடாக இளையோருக்கு போதையற்ற நாடும், நன்நெறி மிகு எதிர்காலமும்” எனும் தொனிப் பொருளின் கீழ் சுமார் 2000 பேருக்கு மேல் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலமொன்று வெள்ளிக்கிழமை பகல் திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் எம். தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் பூமரத்தடிச்சேனையிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி வெருகல் பிரதேச செயலக முன்றலில் முடிவடைந்தது.

போதைப் பொருளைத் துடைத்தெறிவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

விழிப்புணர்வு பேரணியின் நிறைவில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எம். தயாபரன் இலங்கையில் வறுமை கூடிய பிரதேசங்களயில் ஒன்றாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவு இருப்பதற்கு இப்பிரதேச வாசிகள் கைக்கொள்ளும் மதுப் பாவினையே பிரதான காரணமாக உள்ளது. இதன் பின் விளைவுகளாக பாடசாலை மாணவர் இடைவிலகல், இளவயதுத் திருமணம், பெண்கள் வெளிநாட்டு பணிப்பெண்களாகச் செல்லுதல், நோய்  என்பன உள்ளன.

எனவே இந்த நிலைமைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக உள்ள மதுப்பாவினையை ஆண்களும் பெண்களும் விட்டொழிக்க வேண்டும்” என்றார்.



வேர்ள்ட் விஷன் நிறுவனத்தின் அனுசரணையுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெருகல் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எச்.கே.ஏ. கலபதி, பொறுப்பு வைத்தியர் ஜி. வீரவர்தன, வெருகல் உதவிப் பிரதேச செயலாளர் ஏ. லதுமிரா உட்பட இன்னும் பல அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.





Share this article :

Post a Comment

 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin