கணினி மென்பொருள் உருவாக்க போட்டியில்அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா மாணவன் முதலிடம்


கொழும்பு விசாகா  கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு INFOVICT 2015  மற்றும் தொழில்நுட்ப  தொடரில்  பாட ரீதியான கணினி மென்பொருள் உருவாக்க போட்டியில்அகில இலங்கை ரீதியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவரான எல்.ஹஸீப் முஹம்மட் இரண்டாம்  இடத்தை பெற்றுக்கொண்டார்.



இப்போட்டி கொழும்பு விசாகா கல்லூரி மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற போது  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் கணினிப் பொதிகளையும் வழங்கி வைத்தார்.

வெற்றி பெற்ற இம்மாணவருக்கான வழிகாட்டலை கல்லூரி அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீனின் பணிப்புரையின் பேரிலும் இணைப்பாட விதானத்துக்கு  பொறுப்பான பிரதி அதிபர் ஏ.பி.முஜூனின் மேற்பார்வையிலும்  ICT  பாட ஆசிரியரான எம்.ஐ.எம்.பசீல் வழங்கியிருந்தார்.



இப்போட்டியில் முதலாம் இடத்தை  கொழும்பு நாலாந்தா கல்லூரி பெற்றுக்கொண்டது.   இப்போட்டியில் தேசிய ரீதியிலும் கிழக்கு மாகாண ரீதியிலும் கலந்து கொண்ட ஒரேயொரு மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது
Share this article :
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin