புதிய பதிவுகள்
print this page
செய்திகள்

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­கு இந்­தியா பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும்"

புதிய அர­சி­ய­ல­மைப்­பினை நிறை­வேற்­று­வ­தற்­காக இந்­தியா தனது பூர­ண­மான ஒத்­து­ழைப்­பினை வழங்கும் என இந்­திய வெளிவி­வ­கார அமைச்சர் சுஷ்மா சுவராஜ் எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்­த­னி­டத்தில் உறு­தி­ய­ளித்­துள்ளார். இந்து சமுத்­திர மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக இலங்­கைக்கு விஜயம் செய்­துள்ள இந்­தி­யாவின் வெளிவி­வ­கார அமைச்­ச­ரான சுஷ்மா சுவராஜ் தலை­மை­யி­லான குழு­வி­ன­ருக்கும் எதிர்க்­கட்சித் தலை­வரும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னுக்கும் இடை­யி­லான சந்­திப்பு கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் உள்ள பிர­மு­கர்­க­ளுக்­கான பகு­தியில் நேற்று வெள்ளிக்­கி­ழமை முற்­பகல் 11.45 மணியளவில் ஆரம்­ப­மா­கி­யி­ருந்­தது. இச்­சந்­திப்பில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்டப் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­தி­ரனும் பங்­கேற்­றி­ருந்தார். அரை மணி­நே­ர­மாக நடை­பெற்ற இச்­சந்­திப்­பின் ­போது எதிர்க்­கட்­சித்­த­லைவர் இரா.சம்­பந்தன், இந்திய வெளிவி­வ­காரக அமைச்சரின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­தா­வது, "புதிய அர­சியல் யாப்பு உரு­வாக்கும் கரு­மத்­திற்கு உரிய முக்­கி­யத்­துவம் கொடுக்­கப்­பட வேண்டும். இதனை மேலும் இழுத்­த­டிக்­கப்­ப­ட­லா­காது. இந்த விடயம் சம்­பந்­த­மாக ஏற்­க­னவே பல்­வேறு நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. அந்த நட­வ­டிக்­கை­களின் அடிப்­ப­டையில் மேலும் கால­தா­மதம் ஏற்­ப­டாத வகையில் அர­சி­ய­ல­மைப்பு யாப்பின் வரை­வா­னது இந்த வருட இறு­திக்குள் பாரா­ளு­மன்­றத்தில் நிறை­வேற்­றப்­பட்டு, அதனைத் தொடர்ந்து உட­ன­டி­யாக அது சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­புக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்டும். இலங்கை அர­சாங்­க­மா­னது இந்த நாட்டு மக்­க­ளுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் கொடுத்த வாக்­கு­று­தி­களின் அடிப்­ப­டையில் இந்தக் கரு­மத்­தினை நிறை­வேற்­று­வ­தனை இந்­திய அர­சாங்கம் உறு­திப்­ப­டுத்த வேண்டும் என்றார். இதன்போது இந்திய அரசாங்கத்தினது ஒத்துழைப்பை மீளவும் உறுதி செய்த வெளி விவகார அமைச்சர், இந்த நடவடிக்கைகளை நிறைவுக்குக் கொண்டுவருமுகமாக தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு இருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
0 commentaires

இணையப் பாவனையாளர்களுக்கு மேலதிகமாக 10% இன்டர்நெட் பக்கேஜ்

செப்டெம்பர் 1முதல் அமுலாகும் வகையில் அனைத்து வகையான இணையப் பாவனையாளர்களுக்கும் இணைய சேவைக்காக மேலதிகமாக 10% இன்டர்நெட் பக்கேஜ்கள் வழங்கப்பட உள்ளது.
அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10% போனஸ் Data வழங்கப்பட உள்ளதாக தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசாங்கத்தினால் இன்டர்நெட் பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்பு வரியானது அகற்றப்பட்டமையையடுத்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் தெரிவித்துள்ளனர்.

இணைய சேவைக்காக இதுவரை விதிக்கப்பட்டு வந்த 10 வீத தொலைத்தொடர்பு வரி இன்று 01ம் திகதி முதல் குறைக்கப்படும் நிதியமைச்சர் மங்கள சமரவீர கடந்த ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி அறிவித்தார்.
0 commentaires

ஏறாவூரைச் சேர்ந்தவர்கள் தப்பியோட்டம் ; பல மாடுகள் பலியான சோகம்

ஏறாவூர் பிரதேசத்தில் இருந்து அக்குரணை வரை மாடுகளை ஏற்றிச் சென்ற பாரவூர்தியொன்று நாவுல – கொஹோன்வல இராணுவ முகாமிற்கு அருகில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

நேற்று அதிகாலை 5.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்திற்கு பின்னர் அந்த இடத்திற்கு பலர் விரைந்துள்ள நிலையில், பாரவூர்தியினுள் 11 மாடுகள் உயிரிழந்து காணப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அந்த பாரவூர்தியில் 38 மாடுகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

விடிந்த பின்னர் பாரவூர்தியில் பயணித்த எவரும் அந்த இடத்தில் இல்லாத நிலையில், பாரவூர்தியை வீதியில் இருந்து அகற்றுவதற்கு காவல்துறைக்கு அறிவித்த போதும் காவல்துறையினர் உரிய நேரத்திற்கு வரவில்லை என பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

20 மாடுகளை ஏற்றிச் செல்லவே அந்த பாரவூர்திக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பாரவூர்தியில் வந்தவர்கள் தப்பிச் சென்றுள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 commentaires

விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது

விடுதலைப்புலிகளின் கோட்பாடு இன்னமும் உயிருடன் உள்ளது என்று இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப்பட்ட வழக்கானது விடுதலைப் புலிகளின் கோட்பாடு உயிர்ப்புடன் இருப்பதையே சுட்டி நிற்கின்றது என்றும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன சுட்டிக்காட்டினார்.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் ஜெகத் ஜயசூரியவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகளை இலங்கை இராணுவம் முற்றாக மறுக்கின்றது என்றும் அவர் கூறியுள்ளார்.
0 commentaires

இன்றைய வீரவணக்கம்!


லெப்டினன்ட்
சங்கர் (சுரேஸ்)
செல்வச்சந்திரன் சத்தியநாதன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 27.11.1982

 லெப்டினன்ட்
சீலன் (ஆசீர்)
ஞானப்பிரகாசம் லூக்காஸ் சாள்ஸ்அன்ரனி
புனிதமரியாள் வீதி, திருகோணமலை
வீரச்சாவு: 15.07.1983

 வீரவேங்கை
ஆனந்
இராமநாதன் அருள்நாதன்
மயிலிட்டி, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 15.07.1983

 லெப்டினன்ட்
செல்லக்கிளி அம்மான்
சதாசிவம் செல்வநாயகம்
திருநெல்வேலி கிழக்கு, கல்வியங்காடு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 23.07.1983

 வீரவேங்கை
புத்தூர் மாமா
தாமு கந்தையா
புத்தூர் கிழக்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

 வீரவேங்கை
புறோக்கர்
சின்னப்பு சத்தியேஸ்வரன்
அச்சுவேலி தெற்கு, யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 25.07.1983

 வீரவேங்கை
ராஜ்மோகன்
சிவராமலிங்கம் ராஜ்மோகன்
தும்பளை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 20.01.1984

 வீரவேங்கை
அமல் (பணக்காரன்)
மிக்கேல்பிள்ளை அமலதாஸ்
குருநகர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.05.1984

 வீரவேங்கை
செல்வம்
வேலுப்பிள்ளை அன்னலிங்கம் பகீரதன்
மண்டைதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.05.1984

 வீரவேங்கை
ரகுமான்
அருளம்பலம் ரகுபதி
இரணைஇலுப்பைக்குளம், வவுனியா.
வீரச்சாவு: 26.05.1984

 வீரவேங்கை
ஸ்.ரீபன்
நடராசா ஆனந்தராசா
அனலைதீவு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 29.06.1984

 கப்டன்
லாலா ரஞ்சன்
கனகநாயகம் ஞானேந்திரமோகன்
ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 13.07.1984

 வீரவேங்கை
அலெக்ஸ் (சின்னக்கண்ணாடி)
தேவரத்தினம் மொறிஸ் றெஜினோல்ட்
கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.07.1984

 வீரவேங்கை
வாசன்
ஐயம்பிள்ளை மணிவாசகம்
நெடுந்தீவு கிழக்கு, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 18.07.1984

 வீரவேங்கை
சஞ்சீவி
வைத்திலிங்கம் மகேசநாதன்
வீரமாணிக்கதேவன்துறை, மயிலிட்டி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1984

 வீரவேங்கை
நிக்கி
வைத்திலிங்கம் நிகேதரன்
சுண்ணாகம் மத்தி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 11.08.1984

 வீரவேங்கை
தீசன் (குமரிநாடன்)
செல்லத்துரை செல்வநாயகம்
கோவில்குஞ்சுக்குளம், ஓமந்தை, வவுனியா.
வீரச்சாவு: 23.08.1984

 லெப்டினன்ட்
எட்வின்
இரத்தினசபாபதி திலீபன்
புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு.
வீரச்சாவு: 10.09.1984

 லெப்டினன்ட்
ராஜா
இராமலிங்கம் பரமதேவா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 22.09.1984

 வீரவேங்கை
ரவி
தம்பையா வாமதேவன்
மகிழடித்தீவு, கொக்கட்டிச்சோலை, மட்டக்களப்பு.
வீரச்சாவு: 22.09.1984 


0 commentaires

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம்!

தேசிய அடையாள அட்டையில் இன்று முதல் மாற்றம் ஏற்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் பி. வியானி குணதிலக்க தெரிவித்துள்ளார்.

இன்று முதல் புதிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சர்வதேச சிவில் விமான சேவை அதிகார சபையின் தரத்திலான நிழற்படங்களை தங்கள் அடையாள அட்டை விண்ணப்பத்துடன் சமர்பிக்க வேண்டும்.

குறித்த நிழற்படங்களை எடுப்பதற்காக நாடு முழுவதும் 1700 புகைப்பட்ட நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அது தொடர்பில் பிரதேச செயலாளர் அலுவலகங்களிலும், கிராம உத்தியோகத்தர்களிடமும் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் என வியானி குணதிலக்க மேலும் குறிப்பிட்டார்.

அதற்கு மேலதிகமாக ஆட்பதிவு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் குறித்த தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

அத்துடன் குறித்த புகைப்பட நிலையங்களுக்கு தங்கள் முத்திரையுடனாக பதிவு சான்றிதழ் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது.

திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, கடந்த 1972 ஆம் ஆண்டு முதல் பாவனையில் இருந்து வந்த தேசிய அடையாள அட்டைகை்குப் பதிலாக இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டை பாவனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட் தேசிய அடையாள அட்டையில் நபருடைய புகைப்படம், சுயவிபரம், கைவிரல் அடையாளம், இரத்த வகை ஆகியன உள்ளடக்கப்படவுள்ளன
0 commentaires

மலையகத்தில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மலையகத்தில் தொடர்ந்து பெய்து வரும் அடை மழையினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இன்று (01) காலை முதல் அதிக மழை பெய்து வருகின்றமையினால் வாகனங்கள் செலுத்துவதில் சாரதிகள் பெரிதும் பாதித்துள்ளனர்.
ஹட்டன், நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களிலும் ஸ்தம்பித நிலை ஏற்பட்டுள்ளது.
அத்துடன் மலையகத்தின் மேற்கு பகுதிகளிலும், நீரேந்து பகுதிகளிலும் இன்று பிற்பகல் வரை ஒரு மணித்தியாலம் தொடர் மழை பெய்துள்ளது.
அதிக மழையுடன் கடும் காற்றும் சில பகுதிகளில் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து ஹட்டன் நகர மத்தியில் சிறு வௌ்ளம் ஏற்பட்டுள்ள
1 commentaires

பொலித்தீன் தடை குறித்த வர்த்தமானி வெளியீடு!

பொலித்தீன்  பொருட்களின் பயன்பாடு மற்றும் அதன் உற்பத்திகள் என்பவற்றிற்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இன்று(01) வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய 20 மைக்ரோனிற்கும் குறைவான பொலித்ததீன் பொருள் பாவனை மற்றும் விற்பனை என்பவற்றிற்று தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடன் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் அதிக தடிப்புடைய பொலித்தீன்களை உற்பத்தி செய்தல், விற்பனை செய்தல், தடிப்புடைய பொலித்தீன் பைகளை  இலவசமாக விநியோகித்தல், மற்றும் காட்சிப்படுத்துதல் என்பனவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 இதேவேளை மாற்று உற்பத்திகள் இது வரை அறிமுகப்படுத்தப்படாமையின் காரணமாக சில நோக்கங்களுக்காக மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் எழுத்து மூல அனுமதியுடன் பயன்படுத்த முடியும் என்றும் அந்த வர்த்தமானி அறிவித்தலில் கூறப்பட்டுள்ளது.

இன்று தொடக்கம் பொலித்தீன் பாவனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் ஜனவரி மாதம் வரை சட்ட நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 commentaires

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள் ; கிழக்கு மாகாண முஸ்லிம்கள்



அக்கரைப்பற்று
( அபூஸாலி முஹம்மத் சுல்பிகார் ) பர்மாவில் ரோஹினியா முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெரும் இனச்சுத்திகரிப்பு வன்முறை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும் அதனை தடுக்க இலங்கை அரசும் சர்வதேசமும் பர்மா அரசை வலியுறுத்தவும் ரோஹிணியை முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் கோரி அக்கரைப்பற்று மக்கள் ஜும்மாஹ் தொழுகையின் பின்னர் பட்டின பள்ளிவாசல் முன்பாக அமைதியான முறையில் கண்டன பேரணி நடத்தி ரோஹினியா முஸ்லிம்களுக்கு தமது ஆதரவை வெளிப்படுத்தினர்
காத்தான்குடி 
(S.சஜீத்) மியன்மார் முஸ்லிம் உறவுகளுக்கு தற்போது அந்நாட்டில் ஏற்பட்டிருக்கும் இன வெறி தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் "அப்பாவி ரோஹிங்ய முஸ்லிம்களைக் கொள்ளாதே!!" எனும் தோணிப் பொருளில் கைகளில் பல பதாதைகளை ஏந்தியவாரு காத்தான்குடியில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா மற்றும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்ளேனத்தின் ஏற்பாட்டில் (01) இன்று ஜூம்ஆத் தொழுகையைத் தொடர்ந்து இடம்பெற்றன.
இவ் ஆர்ப்பாட்ட பேரணியானது காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் பள்ளிவாயலில் முன்பாக ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதி ஊடாக கொண்டு சென்று காத்தான்குடி பிரதேச செயலக, செயலாளரிடம் காத்தான்குடி மக்கள் சார்பாக மகஜர் ஒன்றினை சமர்ப்பித்தனை தொர்டந்து குறித்த பேரணியினை அமைதியான முறையில் முடித்துக் கொண்டனர் என்பது குறப்பிடத்தக்கது.
கிண்ணியா
(ஹஸ்பர் ஏ ஹலீம்) மியன்மாரில் நடைபெறும் மிலேச்சத்தனமான மனித அழிப்புக்கெதிராக இன்று (01.09.2017) ஜும்ஆ தொழுகையின் பின்னர் கிண்ணியாவில் நகர சபை மைதானத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமும் துஆ பிரார்த்தனையும்.இடம் பெற்றன இதன்போது ரோஹிங்யா முஸ்லீம்களுக்கெதிராக நடைபெறும் உயிர் இழப்புக்களை கண்டித்து ஆர்ப்பாட்டமும் துஆபிரார்த்தனையும் இடம்பெற்றது கிண்ணியா பகுதியினைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட உலமாக்கள் அமைப்புக்கள் என பங்கேற்று தங்களது கோசங்களை எழுப்பியவாறு இறுதியாக துஆப் பிர்ர்த்தனையிலும் ஈடுபட்டார்கள்.
ஓட்டமாவடி
ரோஹிங்கியா முஸ்லிம் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ஓட்டமாவடியில் எதிர்ப்பு பேரணியொன்று மேற்கொள்ளப்பட்டது.
ஜூம்ஆ தொழுகையின் பின்னர் கல்குடா ஜம்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி ஏ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில், ஓட்டமாவடி முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாசல் முன்பாக இந்த எதிர்ப்பு பேரணி இடம்பெற்றது.
இந்த எதிர்ப்பு பேரணியை கல்குடா முஸ்லிம் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்கள், சமூக சேவை அமைப்புக்கள், விளையாட்டுக் கழகங்கள் என்பன ஒன்றிணைந்து நடத்தியிருந்தன.
இதன்போது பேரணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் மௌனம் காப்பது பெரும் ஏமாற்றத்தைத் தருகிறது.
இந்த மக்களைப் பாதுகாக்கும் பொருட்டு ஐ.நா சபையும், சர்வதேச சமூகமும் உடனடியாக தலையீடு செய்து உரிய நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்.
0 commentaires

உண்மையை மறைத்து நல்லிணக்கத்தை அடையமுடியாது!

“உண்­மையை மறைத்து நல்­லி­ணக்­கத்தை ஒரு­போ­தும் அடைய முடி­யாது. பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது? என்­பதை முழு­மை­யாக அறி­ய­வேண்­டும். அது வெளிப்­ப­டுத்­தப்­ப­டா­த­வரை நாட்­டில் நல்­லி­ணக்­கம் ஏற்­ப­டாது”
இவ்­வாறு எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார். பலவந்தமாகக் காணா­மல் ஆக்­கப்­பட்­டோருக்கான உலக தினத்தை முன்­னிட்டு கொழும்பு விகா­ர­மா­தேவி பூங்­கா­வில் நேற்று மாலை 4 மணிக்கு நடை­பெற்ற கூட்­டத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:
2009ஆம் ஆண்­டுக்கு முன்­ன­ரும் பின்­ன­ரும், பல ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­டுள்­ளார்­கள். காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­களை மீட்க அவர்­க­ளின் நெருங்­கிய அன்­புக்­கு­ரிய உற­வு­கள் போராடி வரு­கின்­றார்­கள். இது சாதா­ரண விட­ய­மல்ல. மிகப் பார­தூ­ர­மான விட­யம்.
தெற்­கில் 1989ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் பல ஆயி­ரக் கணக்­கா­னோர் காணா­மல் ஆக்­கப்­பட்­டார்­கள். இந்த நாட்டு மக்­கள் அப்­போது இந்த விட­யத்­துக்கு முக்­கி­யத்­து­வம் கொடுத்­தி­ருந்­தால், சில வேளை­க­ளில் 2009ஆம் ஆண்டு நடந்­தவை நடக்­கா­மல் விட்­டி­ருக்­கக் கூடும்.
தாங்­கள் விரும்­பி­ய­வற்­றைச் செய்­து­விட்டு சட்­டத்­தின் முன்­னால் செல்ல வேண்­டிய தேவை­யில்லை, எத­னை­யும் செய்து விட்­டுத் தப்­பி­வி­ட­லாம். அதற்­குப் பொலிஸ், இரா­ணு­வம், அரசு உத­வும். எமக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­க­மாட்­டார்­கள் என்ற நிலை மாற வேண்­டும்.
அந்­தத் துணிவு அகற்­றப்­பட வேண்­டும். அது இல்­லா­மல் செய்­யப்­பட்­டால்­தான் நாட்­டில் பல­வந்­த­மா­கக் காணா­மல் ஆக்­கப்­ப­டு­தல் இல்­லா­மல் போகும்.
நாட்­டில் அனை­வ­ரும் ஏற்­கக் கூடிய அர­ச­மைப்பு உரு­வாக வேண்­டும். அப்­போ­து­தான் நாட்­டில் அமை­தி­யாக எல்­லோ­ரும் வாழ முடி­யும்.
காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ருக்­கான அலு­வ­ல­கத்தை நிறு­வும் சட்­டம் கடந்த ஆண்டு நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. அது இன்­ன­மும் நடை­மு­றைக்கு வர­வில்லை. அந்த அலு­வ­ல­கம் நிறு­வப்­பட வேண்­டும். சட்­ட­ரீ­தி­யான செயற்­பா­டு­கள் இடம்­பெற வேண்­டும். அத­னூ­டாக குற்­ற­வா­ளி­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்டு நீதி நிலை­நாட்­டப்­பட வேண்­டும்.
பல­வந்­த­மாக காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளில் எல்­லோ­ரும் உயி­ரு­டன் இருக்­கின்­றார்­கள் என்று கூற­வில்லை. பலர் உயி­ரு­டன் இல்­லா­மல் இருக்­க­லாம். நிலமை எப்­ப­டி­யாக இருந்­தா­லும் நாம் உண்­மையை அறி­யா­மல் இருக்க முடி­யாது.
காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது தொடர்­பில் உண்­மை­க­ளைக் கண்­ட­றிய வேண்­டும். இந்­தக் கட­மையை நிறை­வேற்­று­வ­தாக இலங்கை அரசு ஐ.நா.வுக்கு வாக்­கு­றுதி அளித்­துள்­ளது. இதற்­கான சகல நட­வ­டிக்­கை­யும் எடுப்­போம் என்று கூறி­யுள்­ளது.
ஆனால் அதனை நிறை­வேற்­ற­வில்லை. பன்­னாட்­டுச் சமூ­கம் இதில் மிக­வும் கவ­ன­மாக இருக்­கின்­றது. நாம் பல முனை­க­ளில் போராட வேண்­டும் என்று கேட்­கின்­றேன். நாமும் பல வழி­க­ளி­லும் அழுத்­தங்­க­ளைக் கொடுத்து வரு­கின்­றோம். நாம் அனை­வ­ரும் பன்­னாட்­டுப் பங்­க­ளிப்­பு­டன் வெற்­றி­ய­டை­வோம். எமது அனைத்து முயற்­சி­க­ளை­யும் சன­நா­யக ரீதி­யில் முன்­னெ­டுக்க வேண்­டும் – என்­றார்.
0 commentaires

யானை தாக்குதலில் நபர் ஒருவர் பரிதாப பலி!

மட்டக்களப்பு மாவட்டத்தின், வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை யானை தாக்கியதன் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் வெல்லாவெளி, புத்தடிமேடு பகுதியில் வைத்து யானையின் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெல்லாவெளி பகுதியை சேர்ந்த தம்பிராசா திருச்செல்வம்(62வயது) என்பவரே உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்த நிலையில் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான விசாரணையை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 commentaires

தம்பலகாமம் மீரா நகரில் உயர்தர மாணவன் தூக்கிட்டுத் தற்கொலை

தம்பலகாமம் பிரதேசம் மீரா நகரில் இளைஞன் ஒருவன் நேற்று (31/08/2017)காலை தூக்கிட்டுக் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் இம்முறை கல்விப் பொது தராதர  பரீட்சை எழுதிய மாணவர் என்றும் இவர் தான் எழுதிய பரீட்சையில் திருப்தி இன்மை காரணமாக இவ்வாறு செய்து கொண்டாதாகவும் கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளதாகவும் தெரியவருகிறது.

 இது விடயமாக தம்பலகாமம் பொலிசார் விசாரணை செய்து வருவதாகவும் சடலம் திரு கோணமலை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

0 commentaires

மாணவர்களின் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவிப்பு!

பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்ட திட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள்
என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள்.
ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதை நாம் உணரக் கூடியதாக உள்ளது என்று கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

நிருவாகக் கட்டடித்தினை ஆக்கிரமித்ததன் காரணமாக இயக்கமற்றிருக்கும் கிழக்குப் பல்கலைக்கழத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் மாணவர்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் விடுத்துள்ள அறிக்கையிலேயே சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு - வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னால் கடந்த 08ஆம் திகதி மதிய வேளை சீசிரீவி கமராவை அகற்ற வேண்டும், விடுதி வசதி வழங்கப்பட வேண்டும், தடை விதிக்கப்பட்டுள்ள மாணவர்களை அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைகளுடன் மாணவர்கள் வந்தாறுமூலையிலுள்ள கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத் தொகுதியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வியாழக்கிழமை வரைக்கும் அக்கட்டிடத் தொகுதியினுள்ளேயே இருந்து வருகின்றனர்.

கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புக் கல்வியை பயில வந்து இன்று நிர்வாகக் கட்டிடத் தொகுதியை ஆக்கிரமித்திருக்கும் மாணவர்களாகிய தங்களுக்கு பொறுப்பு வாய்ந்த ஊழியர் சங்கம் என்ற வகையில் தங்களின் மேலான கவனத்திற்கு சில விடயங்களைத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பொதுவாக கல்வி நடவடிக்கைகள் பல்வேறு காரணிகளால் தாமதமாவது நீங்கள் அறிந்ததே.

தங்களது பட்டப்படிப்பு கல்வியாண்டு 03 அல்லது 04 வருடங்களுக்குள் முடிவுற வேண்டும்.

இலங்கையில் பல்வேறு பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து பல்வேறு கஸ்டங்களுக்கு மத்தியில் உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்து பட்டப்படிப்பினை பயில வந்திருக்கும் மாணவர்களாகிய நீங்கள் உரிய காலத்தில் பட்டப்படிப்பை பூர்த்தி செய்து தொழில் வாய்ப்பை பெற்று உங்கள் பெற்றோரின் எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டியது உங்களது தார்மீகப் பொறுப்பு.

அதுவே எங்களினதும் விருப்பு. எமது நாட்டில் வேலையில்லாப் பிரச்சினை தீவிரமாகியுள்ள இன்றைய நிலையில் உங்கள் பட்டப்படிப்பும் தாமதமாவது மிகவும் கவலைக்குரியது.

இலங்கைப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் விடுதி வசதி வழங்கப்படுவதென்பது சாத்தியமற்றதொரு விடயம்.

சகல பல்கலைக்கழகங்களும் தங்கள் பல்கலைக்கழகங்களில் இருக்கும் சாத்தியமான வளங்களைப் கொண்ட மாணவர்களின் விடுதி வசதியைத் தீர்மானிப்பது நியதி.

பல்கலைக்கழகங்களுக்கான அரச நிதி ஒதுக்கீட்டைப் பொறுத்தே இத்தீர்மானம் அமையும்.

இருப்பினும் எமது பல்கலைக்கழகத்தில் முதலாம் மற்றும் இறுதியாண்டு மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
advertisement

இவ்விடயத்தில் மாணவர் விடுதியில் உபவிடுதிக் காப்பாளர், விடுதிப் பராமரிப்பாளர், சிற்றூழியர், பாதுகாப்பு உத்தியோகத்தர், சுத்திகரிப்பு தொழிலாளர்களின் வேதனங்கள், மற்றும் மின்சாரம், நீர், தொலைபேசி, சுகாதார வசதிகள் என்பவற்றின் கொடுப்பனவுகளுக்கான நிதி என்பன பல்கலைக்கழகங்களுக்கு ஏலவே கிடைக்கப்பெற வேண்டும்.

இதற்கு அரச நிதிக் கொள்கை அனுமதிக்க வேண்டும். கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஏறத்தாழ 5000 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.

இவர்களில் ஏறத்தாழ 2500 மாணவர்களுக்கு விடுதி வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலதிக மாணவர்களுக்கு விடுதி வசதிகளை வழங்கி அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் நிர்வாகமே தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.

எனினும் மாணவர்களின் கோரிக்கைகளைக் கருத்திற்கொண்டு நிர்வாகம் இச்சவாலை எதிர்கொண்டுள்ளது.

விடுதி வசதி நியதியை மீறி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் போது மாணவர் நலன் குறித்தும் சிந்திக்க வேண்டிய கடப்பாடு பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.

நீர் வசதி, சுகாதாரப் பிரச்சினைகள், இட நெருக்கடிகளால் மாணவர்களிடையேயான முரண்பாடுகள், மன உளைச்சல்கள் என்பவற்றுக்கும் நிர்வாகமே பொறுப்புக்கூற வேண்டும்.

விடுதிகளில் நெருக்கடி காரணமாக மாணவர்களால் ஏற்படுத்தப்படும் இன்னோரன்ன பிரச்சினைகளும் அப்பிரச்சினைகளை தீர்ப்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகளும் நிர்வாகத்திற்கு தலையிடியாக அமைவதும் பழக்கப்பட்டதொன்றாகி விட்டது.

இவையனைத்தையும் கருத்திற்கொண்டே பல்கலைக்கழக நிர்வாகம் மிகவும் அவதானமாக விடுதி வசதிகளை வழங்குகிறது.

மாணவர்கள் மேற்கொள்ளும் பகிடி வதைகள், ஊழியர்கள் மீதான தாக்குதல்கள், பல்கலைக்கழக சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் என்பவற்றுக்கெதிரான தண்டனைகள் மற்றும் ஒழுக்காற்று நடவடிக்கைகள் இவை பற்றிய தெளிவுகள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பல்கலைக்கழக விதிக்கோவை என்பவற்றுக்கமைவாக ஒழுக்கக் கோவை , உபவிதிகள் என்பவற்றினூடாக அனைத்து மாணவர்களுக்கும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மாணவர்களின் முறைகேடான நடவடிக்கை தொடர்பான முறைப்பாடுகள் சாட்சியங்களுடன் கிடைக்கப் பெறுமிடத்து முறையான விசாரணைகளின் பின்னரான பேரவையின் விதந்துரைப்புடன் பாரபட்சமின்றி தண்டனைகளை வழங்க வேண்டிய கட்டாயம் நிர்வாகத்திற்குள்ளது.

இவ்வாறான நடவடிக்கை மாணவர்களை நன்நெறிப்படுத்தி ஒழுக்கசீலர்களாக மாற்றி சமுதாயத்தின் தலைவர்களாகவும் உயரிய கல்விமான்களாகவும் உருவாக்குவதற்கான வழிமுறையே அன்றி மாணவர்களை பழிவாங்குவதற்கான நடவடிக்கைகளல்ல.

இருந்தும் மாணவர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை குறைப்பதற்கான மேன்முறையீட்டை எழுத்து மூலமாக மேற்கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கிழக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் மாணவர்களுக்கு இன்று வரை குறைந்த தண்டனைகளையே வழங்கி வந்துள்ளதென்பதை நீங்கள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

பல்கலைக்கழக மாணவர்கள் எனும் ரீதியில் நீங்கள் உங்களது உரிமைகள் தொடர்பாக போராடுவதற்கு பல்கலைக்கழக சட்டதிட்டங்கள், மாணவர் ஒழுக்கக் கோவைகள், உப விதிகள் என்பவற்றுக்கமைவாக உரித்துடையவர்கள்.

ஆயினும் தற்போதைய மாணவர் உரிமைகளுக்கான நடவடிக்கைகள் எல்லை மீறுவதாக அமைந்திருப்பதைநாம் உணரக் கூடியதாக உள்ளது. குறிப்பாக உங்கள் முறையற்ற செயற்பாடுகள் கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு தனிப்பட்ட ஊழியரினதும் அடிப்படை தொழில் உரிமையை மீறுவதாக உள்ளதுடன் அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் பாரிய இடைஞ்சலாக இருப்பது வெளிப்படை.


இவ்வாறான தங்களது செயற்பாடுகள் தொடரும் பட்சத்தில் அது பல்கலைக்கழத்தை அண்டிய சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவெடுத்து விடுமோ என்ற அச்சமும் எமக்குள்ளது.

எனவே, அன்பார்ந்த மாணவ மாணவிகளே, உங்களை தவறாக வழிநடத்தும் பின்புலங்கள் பற்றி எமக்கு எதுவும் தெரியாத நிலையில் உங்களை நீங்களே உணர்ந்து கொண்டு உங்கள் பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான தேவையானதும் பொருத்தப்பாடுடையதுமான செயற்பாடுகளை மேற்கொள்வீர்களாகவிருந்தால் அதுவே நீங்கள் உங்களது பெற்றோர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான செயற்பாடாக அமைய வேண்டும் என்பதுடன், எங்களினது எதிர்பார்ப்பும் அதுவேயாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை நிருவாகக் கட்டிட முற்றுகையில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு சிங்களத்திலும் மொழி பெயர்க்கப்பட்டு அச்சுப் பிரதிகளாக விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
0 commentaires

உணவுப் பொதிகளின் விலை அதிகரிப்பு!


உணவுப் பொதி ஒன்றின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பொலிதீன் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டதை அடுத்து இந்த விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
லஞ்ச் சீட் பயன்படுத்தி பொதி செய்து வழங்கப்படும் உணவுகளில் விலை அதிகரிப்பு சம்பந்தமாக நாளைய தினம் கூடி தீர்மானிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
0 commentaires

மட்/பட்/மண்டூர் 14 அ.த.க.பாடசாலை பரிசளிப்புவிழாவும் 'ஏத்து' சஞ்சிககை வெளியீடும்

மட்ஃபட்ஃமண்டூர் 14 அ.த.க.பாடசாலை பரிசளிப்புவிழாவும் 'ஏத்து' சஞ்சிககை வெளியீடும் 17 வியாழன் மு.ப 10.00 மணியளவில் அதிபர் எஸ்.புஸ்பராசா தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.

ஆரம்ப நிகழ்வாக  அதிதிகள் வரவேற்கப்பட்டனர் பின்னர் மங்கள விளக்கேற்றல், இறைவணக்கம் தேசிய கொடி, தேசிய கீதம் பாடசாலை கீதம் இசைக்கப்பட்டபின் நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்டன வரவேற்பு உரையினை பிரதி அதிபர் சண்முகம் அவர்களும் தலைமை உரையினை அதிபர் எஸ்.புஸ்பராசா அவர்கள் நிகழ்த்தினார் அவர் தனது தலைமையுரையில் தான் அதிபராக இந்தப் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்ததில் இருந்து தற்போது பாரிய மாற்ரங்களுடன் வளர்ச்சியடைந்து இருப்பதாகவும் தனது உரையில் விரிவாக குறிப்பிட்டிருந்தார்.

இன்றைய இந்த நிகழ்வில் இதுவரைகாலமும்; வலய மற்றும் மாவட்ட,மாகாண மட்டரீதியில் வெற்றியீட்டிய மாணவ மாணவிகளுக்கு பாரிசில்கள் சான்றிதழ்கள் நினைவுச்சின்னங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். அத்தோடு  ; 'ஏத்து' சஞ்சிககை ஒன்றும் வெளியிடப்பட்டது. இன்நிகழ்வில் கலந்து கொள்ளுவதற்காக முதன்மை அதிதியாக கௌரவ.சி.தண்டாயுதபாணி (கல்வி,காணி.காணி அபிவிருத்தி பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சர் அவர்களும் விசேட அதிதியாக காத்தீபன் (திட்டமிடல் பணிப்பாளர்;) சிறப்பு அதிதிகளாக க.துரைநாயகம்(பொருளாளர் சுவிஸ் உதயம் அமைப்பு) பூ.பாலச்சந்திரன்(கோட்டைக்கல்விப்பணிப்பாளர் போரதீவுப்பற்று) கௌரவ அதிதிகளாக சி.ஜெயக்குமார் (கல்வி திட்;ட இணைப்பாளர் வேள்ட் விஷன்) மு.விமலநாதன் (ஓய்வு பெற்ற பிரதிக்கல்விப்பணிப்பாளரும்,கிழக்குமாகாண சுவிஸ் உதயம் தவிசாளரும்) பாவாணர்-அக்கரைப்பாக்கியன் (கிழக்கு மாகாண சுவிஸ் உதய உபதலைவர்) அதிபர்கள்(போரதீ கல்விக் கோட்டம் அழைப்பு அதிதிகள் பழைய மாணவர்கள் மாதர் சங்க உறுப்பினர்கள் கிராம அபிவிருத்திச்சங்கம் விளையபட்டு கழக உறுப்பினர்கள் பெற்றோர்கள், கலந்து கொண்டர்

முதன்மை அதிதி அதி விசேட அதிதி சிறப்பு அதிதிகள் கௌரவ அதிதிகள் ஆகியோர்கள் சிறப்பு உரையினை நிகழ்த்தினர் இறுதியாக ஆசிரியர் கே.ரமேஸ் அவர்களின் நன்றியுரையுடன் இன் நிகழ்வு நிறைவு பெற்றது.











0 commentaires

மண்டூர் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் 33வது ஆண்டு நிறைவு விழா

மண்டூர் பகவான் ஸ்ரீ சத்திய சாயி சேவா நிலையத்தின் 33வது ஆண்டு நிறைவு விழா ஞாயிறு(9) அன்று  நிலையத்தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் தலைமையில் நிலைய மண்டபத்தில் காலை 5.00 மணிக்கு ஓங்காரம்,சுப்ரபாதம்,நகர சங்கீர்த்தனத்துடன் ஆரம்கமானது

தொடந்து மு.ப. 9.00 மணிக்கு பிரசாந்திக் கொடியேற்றத்துடன் ஆரம்பமானது பிரசாந்திக் கொடியை ஸ்ரீ சத்திய சாயி மத்திய அறக்கட்டளை உறுப்பினர் டாக்டர்.ந.பிறேமதாசன் அவர்கள் ஏற்றி வைத்தார். அதனையடுத்து அஸ்டோத்திரம், பஜனை மங்கல விளக்கேற்ரல் நடைபெற்றது பின்னர் நிலையத்தலைவர் ஸ்ரீ.நா.கிருபாகரன் அவர்களால் தலைமையுரை நிகழ்த்தப்பட்டது தொடந்து நிலையச் செயலாளர் ஸ்ரீ.ந.கோகுலன் அவர்கள் ஆண்டறிக்கையினை வாசித்தார்.

அதனையடுத்து நிலைய உபதலைவர் ஸ்ரீ.பி.பிரசாந்தன்,ஸ்ரீ.பி.பொ.விஜிக்குமார்(சேவை இணைப்பாளர் கிழக்கு பிராந்திய இ.குழு) ஸ்ரீ.ஆர்.ஜெகநாதன்(கல்வி .இணைப்பாளர் கிழக்கு பிராந்திய இ.குழு) எஸ்.லோகநாதன்(மனித மேம்பாட்டு கல்வி இணைப்பாளர் கி.பி.இ.குழு) ஆகியோரால் ஆன்மிக உரை நிகழ்தப்பட்டன. சிறப்புரையினை டாக்டர்.ஜே.தனேஸ்குமார்(இளைஞர் அணி தேசிய இணைப்பாளர் அவர்கள் நிகழ்த்தினார். ஆன்மிக சிறப்புரையினை ஸ்ரீ.எஸ்.லோகிதகுமார் (தலைவர் கிழக்குபிராந்திய இணைப்புக்குழு) ஸ்ரீ.தெய்வராஜன்(ஓய்வு பெற்ற அதிபர்) ஆகியோர் ஆற்றினர்.

இறுதியாக மஹா மங்கள ஆராத்தியுடன் நிலைய உறுப்பினர்கள் மாணவர்கள்,பெற்றோர்கள்,ஆன்மிக நிலைய பிரமுகர்கள் மற்றும் மண்டூர் கிராம மக்கள் கலந்து சிறப்பித்தனர் இன் நிகழ்வில்.




0 commentaires

கோல்டன் ஈகள் விளையாட்டுகழக வருடாந்த கிரிக்கட் சுற்றுப்போட்டி-2015

கோல்டன் ஈகள் விளையாட்டுக்கழகமானது கழகத்தின் 27வது ஆண்டினை சிறப்பிக்கு முகமாகவும் மறைந்த எமது கழக உறுப்பினர் திரு. அ.புவிராஜா அவர்களின் 11வது ஆண்டை நினைவுகூறும் முகமாகவும் கிரிக்கட் சுற்றுப் போட்டியினை எதிர்வரும் 29,30, ஆகஸ்ட் மற்றும் 05,06 செப்தெம்பர் மாதம் 2015, ஆகிய தினங்களில் நடாத்துவதற்கு தீர்மானித்துள்ளனர். தங்கள் கழகங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கின்றனர்.

போட்டி விதிமுறைகள்
அணிக்கு 09 பேர் கொண்ட 10 ஓவர் மட்டுப்படுத்தப்பட்ட லீக் முறையிலானது.
போட்டிகள் யாவும் சர்வதேச விதிக்கமைவாக நடைபெறும்.
ஒரு அணியில் 02 வீரர்கள் மாத்திரமே மேலதிகமாக இணைத்துக்கொள்ளமுடியும்.
பந்து வீச்சாளர்கள் பந்து வீசும் போது சர்வதேச விதிக்கு முரணாக பந்து வீசுவது தடைசெய்யப்பட்டுள்ளது.
போட்டிகளில் கலந்து கொள்ளும் கழகங்கள் பந்து மற்றும் துடுப்பாட்ட மட்டைகள் என்பவற்றை கொண்டுவருதல் வேண்டும்.
போட்டிகள் கோல்டன் ஈகிழ் மைதானம் உட்பட மேலும் இரு மைதானங்களில் இடம்பெறும்.
சகல விதமான முறையற்ற பந்து வீச்சுகளுக்கம் குசநந ர்வை வழங்கப்படும்.
போட்டியில் பங்குபற்றும் வீரர்கள் அணைவரும் நீளக்காட்சட்டை (டீழவவழஅ) ரீசேட் அணிதல் வேண்டும்.
அனுமதிக்கட்டணமாக ரூபா 2500 அறவிடப்படும்.
பதிவு கட்டணமாக ரூபா 500ஃஸ்ரீ ஆகஸ்ட் 20ம் திகதிக்கு முன் செலுத்தி பதிவு செய்தல் வேண்டும்.

பரிசு விபரங்கள்
1ம் இடம்
புவிராஜா சவால் கிண்ணம்
1ம் இடத்திற்கான வெற்றிக்கிண்ணம்
ரூபா 25000 பணப்பரிசு
1ம் இடம் பெறும் கழகத்தின் 11 வீரர்களுக்கமான வெற்றிக்கிண்ணம்.

2ம் இடம்
வெற்றிக்கிண்ணம்
ரூபா 12000 பணப்பரிசு
3ம் இடம்
வெற்றிக்கிண்ணம்
ரூபா 5000 பணப்பரிசு
4ம் இடம்
• வெற்றிக்கிண்ணம்
• ரூபா 2000 பணப்பரிசு
சிறப்பு பரிசில்கள்
காலிறுதி போட்டிகளில் இருந்து ஆட்டநாயகன் விருது
தொடரின் சிறந்த பந்து வீச்சாளர் விருது.
ஒரு போட்டியில் அதிக கூடிய ஓட்டம் பெறும் வீரருக்கான விருது
இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனுக்கான விருது மற்றும் ரூபா 500 பணப்பரிசு
தொடர் ஆட்ட நாயகனுக்கான விருது ருளுர்யு(யுஎஸ்எச்ஏ) நிறுவனத்தார் வழங்கும் மின்விசிறியும்
மேலும் பல பரிசுகளும் வழங்கப்படும்

தொடர்புகளுக்கு
து.ராஜ்குமார் - 0772100851
த.தரணிராஜ் - 0771149969

0 commentaires

மட்டக்களப்பில் வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுகத்தான் குடியிருப்பு சிறி பத்திரகாளி அம்மன் வருடாந்த சடங்குற்சவம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க ஆறுமுகத்தான் குடியிருப்பு சிறி பத்திரகாளி அம்மன் 67வது ஆண்டு வருடாந்த சடங்குற்சவம் இன்று புனித தீமிதிப்பு சடங்குடன் இனிதே நிறைவு பெற்றது
கடந்த 21.07.2015 திங்கக்கிழமை கதவு திறத்தலுடன் ஆரம்பமான வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூசைகளும் அருள் வாக்கு வழங்கலும்; இடம் பெற்று வந்தது
கடந்த வெள்ளிக்கிழமை (24.07.2015) கலியாணக்கால் வெட்டும் நிகழ்வுகவும் சனிக் கிழமை (25.07.2015) நெல் குற்றுதல் மடைப்பெட்டி சடங்கு என்பனவும் இடம் பெற்று (26.07.2015) இன்று அதிகாலை விநாயகப்பானை எழுந்தருளல் பண்ணலும் பள்ளயமும் அம்மனின் அதி முக்கியத்துவம் வாய்ந்த தீமிதித்தல்; மிகவும் சிறப்பாக இடம்பெற்றது
இதனை தொடர்ந்து அம்மனுக்கு பூத்தூவும் நிகழ்வு இடம்பெற்று அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டு சடங்கு மகாஉற்சவம் இனிதே நிறைவு பெற்றது



0 commentaires

திருமலையில் பதவியேற்ற புதிய ஆயர்! அரசியற் தலைமைகளும் பங்கேற்பு!

திருகோணமலை மறைமாவட்ட ஆயராக தேர்ந்தெடுக்கப்பட்ட அதி வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல் அவர்களை ஆயராக திருநிலைப்படுத்தப்படும் சடங்கு நேற்று நடைபெற்றது.
இது தொடர்பான நிகழ்வு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரி வளாகத்தில் இன்று காலை நடைபெற்றது.

காலை 8.30 மணிக்கு திருப்பலியுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்புனித நிகழ்வில் மறைமானில் ஆயர் அதி வணக்கத்துக்குரிய ஜோசப் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்களால், ஆயராக அதி வணக்கத்துக்குரிய கிறிஸ்டியன் நோயல் இம்மானுவல் அவர்களை திருனிலைப்படுத்தப்பட்டார்.



நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மறை மாவட்ட ஆயர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் என 500க்கும் மேற்பட்டவர்களுடன் 6000க்கும் அதிகமாக பொது மக்களும் கலந்து கொண்டார்கள். திருகோணமலை மாவட்டத்தின் முக்கியப்பிரமுகர்கள் பங்கேற்றதுடன் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றமை சிறப்பம்சமாகும்.

0 commentaires

கருணாவை ஐ.தே. கட்சியில் சேர்க்கமாட்டோம்;எல்லாம் கருணா பரப்பும் புரளியே - அ.சசிதரன்

கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்து கொள்ளவுள்ளதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என  மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், கட்சியின் செயற்குழு உறுப்பினருமாகிய அரசரெட்ணம் சசிதரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் சில ஊடகங்களில் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்,  ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பாக வெளியான செய்தி முற்றுமுழுதாக பொய்யான கூற்று. கருணா ஐக்கிய தேசிய கட்சியில் இணைவது தொடர்பாக வெளியான செய்தி குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் மேல் இடத்தில் நான் கேட்டபோது அது தொடர்பாக கதைக்கவும் இல்லை, பேசவும் இல்லை.

இது தொடர்பில் இன்று  பிரதமர் காரியாலயத்தில் கேட்ட போது அப்படியொன்றும் நடைபெறவில்லை என்பதை முற்றாக மறுத்து இருக்கின்றது.

எதிர்வரும் தேர்தலில் ராஜபக்சாவுக்கு உதவி செய்வதற்கு ஐக்கிய தேசிய கட்சிக்கு தமிழ் மக்கள் அளிக்கபோகும் வாக்குளை மறைமுகமாக தடுப்பதற்காகவே கருணா இவ்வாறான செய்தியை வெளியிட்டு வருகிறார்.  எந்த விதத்திலும் மக்கள் இவ்வாறான செய்தியினால் குழப்பமடைய வேண்டாம்.

0 commentaires

இலங்கையில் இணைய கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு எட்டு நிறுவனங்கள் கோரிக்கை

இலங்கையில் இணைய கருத்து சுதந்திரத்தை உறுதி செய்யுமாறு எட்டு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளன. வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆசியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த அமைப்புக்களே இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளன.

இணைய கருத்துச் சுதந்திரத்தை பாதுகாப்பதாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

0 commentaires

அலங்காரரூபன் தென்மோடிக் கூத்து அரங்கேற்ற விழா

திறந்த வெளிக்குரிய கூத்தரங்கு மனிதரின் வாழ்தலைத் தன்னகத்தே கொண்ட கலைவடிவமாகும். இது வட்டக் களரியில் உருவாக்கப்பட்டு வடிவம் பெறுவது.  ஒவ்வொரு தடவையும் களரி அடிக்கும் போது அந்த வெளியில் சமுதாயம் ஒண்றிணையும். வாழும். நுண்கலைத்துறையில் 2012களின் பின்னர் அதன் இயல்பான வெளியில் நின்றே கூத்து கற்பிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு கற்றல் - கற்பித்தல் மூலம் திறந்த வெளியில் உருவானதே அலங்காரரூபன் தென்மோடிக் கூத்தாகும்.


இதில் நுண்கலைத்துறை மாணவர்களும் விரிவுரையாளர்களும் ஆடி தமது ஆற்றல், திறன், நிபுணத்துவங்களை வெளிப்படுத்தினர். இக்கூத்து உருவாக்கத்திற்கு நுண்கலைத்துறை விரிவுரையாளர் திரு சு.சந்திரகுமார் செயற்பட்டுள்ளார். இக்கூத்தே, 21.05.2015 அன்று பல்கலைக்கழக மைதானத்தில் களரி கட்டி மிகப் பிரமாண்டமாக அரங்கேற்றப்பட்டது. இதன் தொடக்க விழா வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.


நுண்கலைத்துறையின் தலைவர் கலாநிதி வ.இன்பமோகன் தலைமையுரையை ஆற்றினார். கலைகலாசார பீடாதிபதி க.இராஜேந்திரம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்புரையை ஆற்றினார். நுண்கலைத்துறையின் முதுநிலை விரிவுரையாளர் கலாநிதி சி.ஜெயசங்கர் அவர்கள் எண்ணக்கரு விளக்கவுரையையும் சமகாலத்திற்குக் கூத்தரங்கின் தேவை பற்றியும் உரையாற்றினார்.


அத்தோடு, கிழக்குப்பல்கலைக்கழக பதில் பதிவாளர் திரு அ.பகிரதன் அவர்களும் சிரேஸ்ர மாணவ ஆலோசகர் எம்.ரவி அவர்களும் இதில் கலந்து சிறப்பித்தனர். விரிவுரையாளர்கள், மாணவர்கள், பொது மக்கள் அண்ணாவிமார்களான ப.கதிர்காமநாதன், சி.அலெக்சாண்டர், ப.கமலநாதன், கூத்தர் த.முத்துலிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.


பல்கலைகழக சமுதாயமும் ஊர்க் கூத்தர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு இவ்விழாவைப் பார்த்து மகிழ்ந்ததோடு, பங்குகொண்டு தமது வாழ்த்துகளையும் தெரிவித்தனர். அவர்கள் பூ மாலை, காசி மாலை, அணிவித்ததோடு சால்வை கட்டியும் கை தட்டியும் தமது வாழ்த்துக்களைத் வெளிப்படுத்தினர்.


இக்கூத்தின் அண்ணாவியாராக வே.தம்பிமுத்து அவர்களும் உதவியாக கண்ணகி முத்தமிழ் மன்ற உறுப்பினர்களான கு.பிரபாகரன், சி.கேதீஸ்வரன், வி.கோடீஸ்வரன் அவர்களும் செயற்படுகின்றனர். இக்கூத்தில் பின்வருவோர் பாத்திரங்களைத் தாங்கி ஆடி மகிழ்வித்தனர்.

0 commentaires

இலங்கைத் தேர்தலைக் கண்காணிக்க ஐரோப்பிய ஒன்றியத்தின் 80 பேர் கொண்ட குழு

இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் புதனன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து யாழ் அரச அதிபர், உதவித் தேர்தல் ஆணையாளர், பிரதி வடமாகாண முதலமைச்சர் குருகுலராஜா உள்ளிட்ட பலரையும் சந்தித்திருக்கின்றனர். அத்துடன் சிவில் சமூசத்தின் பலதரப்பட்டவர்களையும் அவர்கள் சந்திக்கவுள்ளனர்.


இந்த தேர்தல் கண்காணிப்புக் குழுவின் தலைவருடன் இரண்டு முக்கிய உறுப்பினர்களும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்தக் குழுவின் தலைவரும் ரொமேனிய நாட்டைச் சேர்ந்தவருமான கிறிஸ்டியல் வ்ரெடா, இலங்கை அரசியலில் யாழ்ப்பாணம் மிகவும் முக்கிய இடத்தை வகிப்பதனால் கொழும்பு வந்து பிரதமரைச் சந்தித்ததும் உடனடியாகவே புதனன்று யாழ்ப்பாணத்திற்கு வந்ததாகக் கூறினார்.

தேர்தல் கண்காணிப்பின் பின்னர் சுமார் 200 பக்கங்களைக் கொண்ட அறிக்கையொன்றை தாங்கள் சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதில் தாங்கள் அவதானித்த அனைத்து விஷயங்களோடு, தங்களின் பரிந்துரைகளும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்றும் அவர் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தேர்தலின்போது, சட்டரீதியான செயற்பாடுகள், ஊடகச் செயற்பாடுகள், தேர்தல் ஒழுங்குமுறைகள், தேர்தல் பரப்புரை நடவடிக்கைள் என தேர்தல் தொடர்பான பலதரப்பட்ட அம்சங்களையும் தாங்கள் கண்காணிக்கவுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், செவ்வாயன்று கொழும்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனையும் சந்தித்துப் பேசியதாகக்கூறினார்.

0 commentaires

திருகோணமலை நகரசபைக் காணி வரி மக்களின் பெயரிலேயே அறவிடப்பட வேண்டும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்

திருகோணமலை நகர சபையால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்கான ஆதன வரிகளை காணி உரிமையாளர்களான மக்களின் பெயரிலேயே அறவிடுமாறு கிழக்கு மாகாண முதலமைச்சரும் மாகாண உள்ளுராட்சிமன்ற அமைச்சருமான செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் திருகோணமலை நகர சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இவ்விடயம் தொடர்பாக வியாழக்கிழமை மாலை கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ். தண்டாயூதபாணி யின் தலைமையில் காந்திநகர், சுலோட்கவூஸ், கஸ்தூரிநகர் ஆகிய கிராமங்களின் பிரதிநிதிகள் மற்றும் முன்னாள் நகரசபை உறுப்பினர் கே. கோகுலராஜ் ஆகியோர் அடங்கிய குழுவுடன் முதலமைச்சர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற கலந்தரையாடலின் போதே இவ்வாறு அறிவிக்கப்பட்டது.


இச்சந்திப்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி திணைக்கள ஆணையாளர் மற்றும் முதலமைச்சரின் செயலாளர் நகரசபை செயலாளர் ஆகியோரும் இடம்பெற்றிருந்தனர்.


1947 ம் ஆண்டு முதல் மேற்சொன்ன கிராமங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு 1995 ம் ஆண்டு முன்னாள் நகரசபை தலைவர் பி. சூரியமுர்த்தி அவர்களால் காணிகளும் அதற்குரிய ஆவணங்களும் வழங்கப்பட்டிருந்தன.


இருப்பினும் அப்போது மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புக்களை வழங்கவே அவர்களால் வழங்கப்பட்ட ஆவணம் செல்லுபடியானதாக அமைந்திருந்தது.
அதன் பின்னர் முன்னாள் நகரசபைத் தலைவர் ச. கௌரிமுகுந்தன் அவர்களுடைய காலத்தில் 576 பேருக்கான காணி உறுதிகள் வழங்கப்பட்டு அவை காணி பதிவாளர் திணைக்களத்தால் அங்கீகரிக்கப்பட்டு நகரசபை பதிவேட்டிலும் பதியப்பட்டது..


இக்காணிக்காக நகரசபையால் அறவிட வேண்டிய வரிகளை சிலரிடம் நகரசபையின் பெயரிலேயே நகரசபை அறவிட்டு வந்தது.

0 commentaires

நீர் பருகிய க.பொ.த.(சா/த) 6 மாணவிகள் வயிற்றுப்போக்கால் அவதியுற்று வைத்தியசாலையில் அனுமதி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திலுள்ள பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தில் நீர் பருகிய க.பொ.த.சா.த 6 மாணவிகள் வயிற்றுப்போக்கால் அவதியுற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, வியாழக்கிழமை வழமைபோன்று பாடசாலைக்கு வந்த மாணவிகள் பாடசாலையில் உள்ள குடி நீரைப் பருகியுள்ளள்னர்.

அதேவேளை, ஏற்கெனவே ஒரு மாணவிக்கு வயிற்றுப்போக்கு இருந்துள்ளது. அதனைத் தொடர்ந்து ஏனைய ஐந்து மாணவிகளும் உடனடியாக வயிற்றுப் போக்குக்கு உள்ளாகியுள்ளனர்.

முதலுதவி வைத்திய சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் வயிற்றுப்போக்குக்கு ஆளான மாணவிகளின் நிலைமை மோசமாகவே உடனடியாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டதாக பாவற்கொடிச்சேனை விநாயகர் வித்தியாலயத்தின் பிரிவுக்குப் பொறுப்பான ஆசிரியர் வடிவேல் ஹரன் தெரிவித்தார்.

இந்தப் பாடசாலையில் கிணற்றிலிருந்து குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்காக பொருத்தப்பட்டிருந்த மோட்டார் 2013 ஆம் ஆண்டு திருட்டுப் போய் விட்டது. அதன் பி;ன்னர் அடி பைப்பின் மூலம் பெறப்படும் நீரையே இந்தப் பாடசாலையில் உள்ள சுமார் 450 மாணவர்களும் 17 ஆசிரியர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.

0 commentaires

புகையிரத்தில் மோதுண்ட இளைஞர் மரணம்

மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கு சற்றுத் தொலைவில் மிச்நகர் கிராமத்தில் புகையிரதத்தில் மோதுண்டு படுகாயமடைந்த இரு இளைஞர்களில் ஒருவர் சிகிச்சை பயனின்றி வியாழக்கிழமை மரணித்துவிட்டதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்ற வேளையில் புகையிரதப் பாதையில் வழமையாக கும்மாளமடித்து  இரவுப் பொழுதைக் கழிக்கும் ஏறாவூரைச் சேர்ந்த இரு இளைஞர்கள் படுகாயமடைந்திருந்தனர்.

கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கிச் சென்ற பயணிகள் புகையிரதம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் பயணிகளை இறக்கி விட்டு மட்டக்களப்பை நோக்கிப் புறப்பட்ட ஒரு சில நிமிட நேரத்தில் இந்த விபத்து சம்பவித்தது.

0 commentaires

போதை ஒழிப்பு மாபெரும் விழிப்புணர்வு ஊர்வலம்

“சுய கண்களால் போதையற்ற உலகைக் காண்போம். போதைத் தடுப்பு தேசிய நிகழ்ச்சியூடாக இளையோருக்கு போதையற்ற நாடும், நன்நெறி மிகு எதிர்காலமும்” எனும் தொனிப் பொருளின் கீழ் சுமார் 2000 பேருக்கு மேல் கலந்து கொண்ட மாபெரும் ஊர்வலமொன்று வெள்ளிக்கிழமை பகல் திருகோணமலை மாவட்டம் வெருகல் பிரதேச செயலகத்தினால் நடத்தப்பட்டது.

பிரதேச செயலாளர் எம். தயாபரன் தலைமையில் இடம்பெற்ற இந்த விழிப்புணர்வு ஊர்வலத்தில் சுகாதாரத் திணைக்கள அதிகாரிகள், பிரதேச செயலக அலுவலர்கள், கிராம மக்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியில் பூமரத்தடிச்சேனையிலிருந்து ஆரம்பமான விழிப்புணர்வுப் பேரணி வெருகல் பிரதேச செயலக முன்றலில் முடிவடைந்தது.

போதைப் பொருளைத் துடைத்தெறிவோம் என்ற தொனிப்பொருளில் துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.

விழிப்புணர்வு பேரணியின் நிறைவில் உரையாற்றிய பிரதேச செயலாளர் எம். தயாபரன் இலங்கையில் வறுமை கூடிய பிரதேசங்களயில் ஒன்றாக வெருகல் பிரதேச செயலகப் பிரிவு இருப்பதற்கு இப்பிரதேச வாசிகள் கைக்கொள்ளும் மதுப் பாவினையே பிரதான காரணமாக உள்ளது. இதன் பின் விளைவுகளாக பாடசாலை மாணவர் இடைவிலகல், இளவயதுத் திருமணம், பெண்கள் வெளிநாட்டு பணிப்பெண்களாகச் செல்லுதல், நோய்  என்பன உள்ளன.

எனவே இந்த நிலைமைகளுக்கெல்லாம் அடிப்படைக் காரணமாக உள்ள மதுப்பாவினையை ஆண்களும் பெண்களும் விட்டொழிக்க வேண்டும்” என்றார்.

0 commentaires

மகிழூர்முனை சக்தி வித்தியாலய மாணவர்கள் ஆயுள்வேத மூலிகைகளை பார்வையிடல் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தின்  பட்டி ருப்பு கல்வி வலயத்துக்குட்பட்ட மட் மகிழூர்முனை சக்தி வித்தியால மாணவர்களின் ஒரு தொகுதியினர் 21.07.2015 அன்று  செவ்வாய்க்கிழமை அன்று மகிழூர்முனை 110பி கிராமத்தில் கணபதிப்பிள்ளை மாணிக்கப்போடி அவர்களின் வீட்டுத்தோட்டத்தில் ஆயுள்வேத மூலிகைகள் பார்வையிட்டனர்.இக்கிராமம் விவசாய கிராமாக இருந்தாலும் இவர்  மூலிகை மற்றும் நாற்றுமேடையினை உருவாக்கி உற்பத்திகளை மேற்கொள்கிறார்.

மூலிகைகள் எமது சுற்றுப்புற சூழலில் காணப்பட்டாலும் அதை அடையாளம் காண்பது எளிதான விடயம் அன்று ஆனாலும் இவரது தோட்டத்தில் முன்னூறு வகையான மூலிகைகள் காணப்படுகின்றது. இவரது  மூலிகைத் தோட்டத்தினை கடந்த காலங்களில் பல கல்லூரி மாணவர்கள் பார்வையிட்டுள்ளனர் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் அதுமட்டுமின்றி கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் பொருட்காட்சி நிகழ்வில் இவரது மூலிகைகள்  இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

0 commentaires

காத்தான்குடி முஸ்லிம் பகுதி வேட்பாளர்களின் கவனத்திற்கு ...முஸ்லிம் வாக்கு அனைத்தும் எனக்கே - பிள்ளையான்

மட்டக்களப்பில் தமிழர்களின் வாக்குகளால் முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்ட வரலாற்றை மாற்றி, முஸ்லிம்களின் வாக்கினால் தமிழன் ஒருவன் தெரிவு செய்யப்பட்டான் என்ற வரலாற்றை ஏற்படுத்துவேன் என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தமிழ்த்தரப்பு பிரதான வேட்பாளருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

வாகரை கண்டலடி மக்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டபோது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், எனது வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியாதவர்கள்தான் புள்ளிவிபரங்கள் தெரியாமல் மக்களைக் குழப்புகின்றார்கள்;. புள்ளி விபரங்கள் தெரியாமல் போலிப்பிரச்சாரம் செய்து மக்களை திசை திருப்ப ஓர் கூட்டம் அலைகிறது என்றார். மேலும் அவர் கூறுகையில்,
இடம்பெறவுள்ள நாடாளுமன்றப் பொதுத் தேர்தலானது அனைவரினது கவனத்தையும் ஈர்த்துக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் செல்வாக்குச் செலுத்திய அரசியல் பிரபல்யங்கள் தனித்தனிக் கட்சிகளிலே போட்டியிடுகின்றமை ஓர் விசேட அம்சமாகும்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புள்ளி விபரங்கள் மற்றும் கடந்த கால அரசியல் போக்குகள் தெரியாத ஒரு சில வேட்பாளர்கள் போலிப்பிரச்சாரங்களை மேற்கொண்டு மட்டக்களப்புத் தமிழ் மக்களைத் திசை திருப்ப முனைகின்றனர்.

0 commentaires

ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

’60 மாதங்களில் புதிய நாடொன்றை அமைக்கும் 5 வருடத் திட்டம்’ என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது.

கொழும்பு விஹாரமாதேவி திறந்த வெளியரங்கில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துள்ள கட்சித் தலைவர்களின் பங்கேற்புடன் இம்முறை தேர்தலுக்கான தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்பட்டது.

பொருளாதாரத்தை மேம்படுத்துதல், ஊழலை வேரோடு இல்லாதொழித்தல், சுதந்திரத்தை உறுதிப்படுத்துதல், அடிப்படை வசதிகளுக்கான முதலீடு மற்றும் கல்வியை மேம்படுத்துதல் என்பன ஐக்கிய தேசியக் கட்சியின் 5 வருடத் திட்டமாகும்.

01. பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கை

இடதுசாரி மற்றும் முதலாளித்துவ பொருளாதாரத்துக்கு அப்பால் மக்களுக்கு பயனுள்ள பொருளாதாரத் திட்டத்தின் ஊடாக, அனுபவத்தை அடிப்படையாகக் கொண்ட போட்டித்தன்மையுடன் கூடிய சமூக வர்த்தக சந்தைப் பொருளாதாரம் தொடர்பில் தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்துதல், பல்வேறு அபிவிருத்தி வலயங்களை நிறுவுதல், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் நிர்வகிக்கும் கிராமத்திற்குப் பதிலாக, கிராமவாசிகளால் நிர்வகிக்கும் கிராமமொன்றை நிறுவுவது நோக்கமாகவுள்ளது.

0 commentaires

Isis மற்றும் தீவிரவாதம் பற்றிய இலங்கை முஸ்லிம் அமைப்புகளின் கூட்டுப் பிரகடனம்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட தீவிரவாதத்திற்கு எதிரான இம்மாநாட்டில் கலந்து கொண்ட முக்கிய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளாகிய நாம் சகலவிதமான தீவிரவாத செயற்பாடுகளையும் அநியாயங்களையும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.

இஸ்லாம் மனித இனத்திற்கு கருணை காட்டும் மார்க்கமாகும். அதன் அடிப்படை போதனைகளாக சமாதானம், அமைதி, பாதுகாப்பு மற்றும் சகோதரத்துவம் போன்றன காணப்படுகின்றன. இஸ்லாம் மனித உயிருக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கின்றதென்றால் ஒரு தனி மனிதனுடைய கொலையை முழு மனித சமூகத்தினதும் கொலையாகக் கருதுகின்றது. இஸ்லாம் போதிக்கின்ற சமாதானம், அமைதி மற்றும் சகோதரத்துவம் என்பன சாதி, மத பேதமின்றி அனைத்து மனிதர்களுக்கும் பொதுவானவையாகும். இஸ்லாம் எமக்கு அனைத்து மனிதர்களுடனும் சமாதானமாகவும், நீதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்ளுமாறு ஏவுகின்றது. மேலும் அநியாயம் இழைத்தல், தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடல் போன்றவற்றை இஸ்லாம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் குழப்பம் விளைவித்தல், கடும்போக்காக நடந்துக் கொள்ளுதல், கொலை செய்தல் ஆகியவற்றை பெரும் பாவங்களாகவும், குற்றங்களாகவும் இஸ்லாம் கருதுகின்றது.

0 commentaires

பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை கண்டுபிடித்துள்ளதாக நாசா அறிவிப்பு

நாம் வசிக்கும் பூமியை ஒத்த மற்றுமொரு கிரகத்தை, கெப்லர் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்துள்ளதாக நாசா நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை காலமும் விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்ட கிரகங்களில் இதுவே, பூமியை மிகவும் ஒத்த விதத்தில் அமைந்துள்ளது என்று நாசா நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. சற்று குளிர்ச்சியான, அளவில் பெரிதற்ற, புறத்தோற்றத்தில் நீரைக் கொண்டமைந்துள்ளது

0 commentaires

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் தோல்வியடையும் - ஜோதிடர் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டாலும் அவரால் பிரதமர் பதவிக்கு வர முடியாது என பிரபல ஜோதிடர் நாத்தாண்டியே பீ.டி. பெரேரா தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ச தோல்வியடைவார் எனவும் மைத்திரிபால சிறிசேன வெற்றி பெறுவார் எனவும் கூறி ஜோதிடர்களில் பெரேராவும் ஒருவர்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளராக போட்டியிட்ட சரத் பொன்சேகா தோல்வியடைவார் எனவும் அவர் சிறையில் அடைக்கப்படுவார் எனவும் அவரை சிறையில் தள்ளியவர்களே அவரை விடுதலை செய்வார்கள் எனவும் ஜோதிடர் பெரேரா குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் பொன்சேகா இழந்த அனைத்தும் அவருக்கு 2015 ஏப்ரலுக்குள் கிடைக்கும் எனவும் அவர் கூறியிருந்தார்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் சரத் பொன்சேகா பீல்ட் மார்ஷல் பதவிக்கு உயர்த்தப்பட்டார். அத்துடன் அவருக்குரிய ஓய்வூதியம் உட்பட அனைத்து சிறப்புரிமைகளும் மீள கிடைத்தன.

இந்த நிலையில், எதிர்வரும் பொதுத் தேர்தல் குறித்து பத்திரிகை ஒன்றில் ஜோதிட எதிர்வு கூறலை வெளியிட்டுள்ள நாத்தாண்டியே பீ.டி. பெரேரா, பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி நிச்சயம் தோல்வியடையும் என திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.

0 commentaires
 
Copyright © 2014. Batti Naadham - All Rights Reserved
Powered by Admin